இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் தமிழ் இந்தி என பல மொழிகளில் வெளியான திரைப்படம் காடன், விஷ்னு விஷால், ரானா டகுபதி ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் யானை முக்கியக் கதாப்பாத்திரமாக இடம்பெறும். அந்த பாத்திரத்தில் கேரளாவைச் சேர்ந்த நடக்கல் உன்னிக்கிருஷ்ணன் என்கிற யானை நடித்திருக்கும். 33 வயதான இந்த யானை தற்போது இறந்ததாக கேரளாவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

கேரளாவில் நிரந்தரமானதொரு தங்கும் இடமில்லாமல் இந்த யானை தவித்ததாகவும் பல நாட்கள் நீரின்றி, உணவின்றி விடப்பட்ட நிலையில் அந்த யானை தற்போது ஆதரவற்று இறந்ததாகவும் யானைகள் உரிமைக்கான குழு ஒன்று தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. இதை அடுத்து பலர் இந்த யானைக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

உன்னிகிருஷ்ணன் காடன் படம் தவிர கேரள சூப்பர்ஹிட் திரைப்படமான அஜகஜதந்திரம் என்னும் படத்திலும் நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.