Exit Polls 2022 LIVE: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் உடனுக்குடன்..
ABP Cvoter Exit Polls 2022 Results LIVE Updates: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்பான உடனுக்குடன் தகவல்கள்
2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 4 முதல் 8 இடங்கள் வரை பெற வாய்ப்பு உள்ளது. அதேபோல் பாஜக 228 முதல் 244 இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. சமாஜ்வாதி கட்சி 132 முதல் 148 இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சி 13 முதல் 21 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. சுயேட்சைகள் 2 முதல் 6 இடங்கள் வரையும் பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது பாஜகவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
மணிப்பூரில் பாஜக தலைமையிலான மீண்டும் அரசு அமைய வாய்ப்பு உள்ளதாக ஏபிபி-சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
மணிப்பூரில் மொத்தம் உள்ள 60 இடங்களில் 21 இடங்களை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும். ஏபிபி-சி வோட்டர்ஸ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக 23 முதல் 27 இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி காங்கிரஸ் கட்சி 12 முதல் 16 இடங்கள் வரை பெற வாய்ப்பு உள்ளது. அதேபோல் பாஜக 23 முதல் 27 இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. என்.பிஎஃப் 3 முதல் 7 இடங்களும், என்பிபி கட்சி 10 முதல் 14 இடங்கள் வரையும் பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது மீண்டும் மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவாவில் ஆட்சியை தக்கவைக்குமா பாஜக?
கோவா தேர்தல் : தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் இதோ....
கோவாவில் ஆட்சியை பிடிப்பதில் இழுபறி நீடிக்கும் என்று ஏபிபி-சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 40 இடங்களில் 21 இடங்களை வெல்லும் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும். 2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி கோவாவில் காங்கிரஸ் கட்சி 12 முதல் 16 இடங்கள் வரை பெற வாய்ப்பு உள்ளது. அதேபோல் பாஜக 13 முதல் 17 இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 1 முதல் 5 இடங்களும், என்ஜிபி கூட்டணி 5 முதல் 9 இடங்கள் வரையும் பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது கோவாவில் யார் ஆட்சி அமைப்பதில் இம்முறை சுயேட்சைகளின் பங்கு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் - பஞ்சாப்பில் அதிக இடங்களை கைப்பற்றுமா ஆம் ஆத்மி?
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் - உத்தராகண்ட் நிலவரம்!
பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் : தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் இதோ..
உத்தராகண்ட் தேர்தல் : தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்பான முழு விவரம்..
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 117 இடங்களில் 59 இடங்களில் வெற்றிப் பெற்றும் பட்சத்தில் ஆட்சியை பிடிக்கும். அந்தவகையில் ஏபிபி-சிவோட்டர்ஸ் நடத்திய பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி 51-61 இடங்கள் வரை பெற வாய்ப்புள்ளது. ஆகவே அங்கு ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் என்று கருதப்படுகிறது.
2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 22 முதல் 28 இடங்கள் வரை பெற வாய்ப்பு உள்ளது. அதேபோல் பாஜக 7முதல் 13 இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 51 முதல் 61 இடங்களும்,அகாலி தளம் கூட்டணி 20 முதல் 26 இடங்கள் வரையும் பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி இம்முறை ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தராகண்ட் மாநிலத்தில் 36 சட்டப்பேரவை இடங்களை பிடிக்கும் கட்சி தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடியும். ஏபிபி-சி வோட்டர்ஸ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சி 38 இடங்கள் வரை பிடிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே அங்கு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏபிபி மற்றும் சி வோட்டர்ஸ் ஆகியோரின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் படி உத்தராக்கண்ட்டில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பிடிக்கும் என்று கூறப்படுகிறது.
2022-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி உத்தரக்காண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 32 முதல் 38 இடங்கள் வரை பெற வாய்ப்பு உள்ளது. அதேபோல் பாஜக 26 முதல் 32 இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 0 முதல் 2 இடங்களும்,சுயேட்சைகள் 3 முதல் 7 இடங்கள் வரையும் பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது
உத்தரப்பிரதேசம், உத்தரக்காண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை ஏபிபி மற்றும் சி வோட்டர்ஸ் ஆகியவை சேர்ந்து நடத்தியுள்ளன.
உத்தரக்காண்ட் மாநிலத்தில் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
உத்தரப்பிரதேசத்தில் 7ஆம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது நிறைவு பெற்றுள்ளது.
கோவா மாநிலத்தில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் 60 தொகுதிகளுக்கு இரண்டு கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
கோவா மாநிலத்தில் 40 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
உத்தரக்காண்ட் மாநிலத்தில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த மாதம் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
Background
ABP Cvoter Exit Polls 2022 Results LIVE Updates:
உத்தரப்பிரதேசம், உத்தராக்கண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 10ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. 403 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச மாநில தேர்தல் முடிவுகளை நாடே உற்று நோக்கியுள்ளது. இவை தவிர பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -