Byjus Layoff: பைஜூஸ் நிறுவனம் ஆறு மாதங்களுக்கு முன் 5 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில், தற்போது மேலும் 1,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


பைஜூஸ்


இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் கல்வி ஆப் நிறுவனமாக பைஜூஸ் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. பைஜுஸ் நிறுவனம் பல்வேறு துணை நிறுவனங்கள் மூலமாக இணையவழி கல்வி சேவையை வழங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மார்க்கெட்டிங் மூலம் மிகப்பெரிய சந்தையை பைஜூஸ் பிடித்துள்ளது. இதனை உலகம் முழுவதும் விரிவுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது பைஜூஸ். 


இந்நிலையில், கடந்து ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு 2,500 ஊழியர்களையும், இந்த ஆண்டு 1,500 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்தது பைஜூஸ். மேலும் பணிநீக்கங்கள் மேற்கொள்ளப்படாது என்று சிஇஓ ரவீந்தரன் தெரிவித்திருந்த நிலையில், மேலும் ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


பணிநீக்கம்


இந்த முறை பைஜூஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 280 சென்டர்களில் இருந்து விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் 1,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளது பைஜூஸ். பல மூத்த மேலாளர்கள் மற்றும் உதவி பொது மேலாளர்கள் இதில் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே இந்த பிரிவில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது பைஜூஸ்.


காரணம்


வருமானம் குறைந்ததோடு, பைஜூஸ் நிறுவனம் கடும் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதும் பணி நீக்கத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வார தொடக்கத்தில் பைஜூஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய 1.2 பில்லியன் டாலர் கடனுக்கான காலாண்டு வட்டியை செலுத்த தவறியுள்ளதாக தெரிகிறது. கடன் வாங்கல், கொடுக்கல் தொடர்பான பிரச்சனையில் பைஜூஸ் நிறுவனம் சிக்கியள்ளதாக தெரிகிறது. இதனால் கடும் நிதி நெருக்கடியில் மாட்டிக் கொண்டு நீதிமன்றம் வரை சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


மேலும், பைஜூஸ் நிறுவனம் கடந்த 2021ஆம் ஆண்டு திரட்டிய 1.2 பில்லியன் டாலன் மூலம் கடன் வழங்கி வந்த நிலையில், தற்போது அதனையும் நிறுத்துவதாக தெரிகிறது. பணம் தட்டுப்பாடு காரணமாக இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


Manipur Violence: மணிப்பூர் வன்முறை திட்டமிட்ட சதியா..? கையில் எடுத்த சி.பி.ஐ.. சூடுபிடிக்கும் விசாரணை..!


Amit Shah: ஒருநாள் முன்னதாகவே தமிழகம் வருகிறார் அமித் ஷா..! காரணம் என்ன?


Accident: நிலக்கரி சுரங்கத்தில் திடீர் சரிவால் விபத்து.. 3 பேர் உயிரிழப்பு - சிக்கிக்கொண்டவர்களின் கதி என்ன?