ஹரியானா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் களநிலவரத்திற்கு எதிராக இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வெற்றி பறிக்கப்பட்டுவிட்டதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.


ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 48 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அம்மாநிலத்தில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இடங்களுக்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 36 இடங்களிலும் பிற கட்சிகள் 5 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இதன் மூலம் பா.ஜ.க. மூன்றாவது முறையாக ஆட்சிய அமைக்க உள்ளது. 


இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான பவன் கெரா, மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் ஹரியானா தேர்தல் பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.


ஹரியானா சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில்,” ஹரியானா சட்டமன்றத் தேர்தக்ல் முடிவுகள் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வெற்றி பறிக்கப்பட்டுள்ளது. தேர்தல், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளோம். நிர்வாகம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்பியதாகவே களநிலவரம் இருந்தது. ஆனால், தேர்தல் முடிவுகளில் அதன் பிரதிபலிப்பு துளியும் இல்லை. இந்த முடிவுகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.இது தொடர்பாக ஆய்வு செய்வோம். “ வாக்கு எண்ணிக்கை, இ.வி.எம். மெசின் செயல்பாடு குறித்து புகார்கள் பெற்றுள்ளோம். அந்த தகவல்களைத் திரட்டி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம்.” என்று தெரிவித்தார். 


தேர்தல் முடிவுகள் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின்  Pawan Khera தெரிவிக்கையில்,” இந்த முடிவுகள் எதிர்பாராத ஒன்று. வாக்கு எண்ணிக்கை நடைபெறுபோது தொடர்ச்சியாக வந்த புகார்கள் அதற்கு சாட்சி, ஹிசார், மஹேந்திரகர், பனிபெட் உள்ளிட்ட இடங்களில் புகார்கள் இருக்கின்றன. இ.வி,.எம். மெசின்கள் சரியாக செயல்பட்டதா என்பது தெரியவில்லை. ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட தோல்வி இது” என்று தெரிவித்தார்.


ஹரியானாவில் களநிலவரத்திற்கு நேர்மாறாக தேர்தல் முடிவுகள் இருக்கிறது.ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியில் முயற்சிகள் தொடரும். ஹரியானா சாப்டம் முடிந்துபோகவில்லை. இது வெளிப்படையான ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட தோல்வி என்றும் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.