Airlines : விமானத்தில் பார்டி... மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட பயணிகள்... போலீசார் செய்த அதிரடி...!

விமனாத்தில் பயணிகள் இரண்டு பேர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

Airlines : விமனாத்தில் பயணிகள் இரண்டு பேர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

சமீப காலமாகவே விமானத்தில் பயணிகள் விதிகளை மீறும் சம்பவம் நடைபெற்ற வருகிறது. அந்தவகையில் தற்போது, இன்டிகோ விமானத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

துபாய் நகரில் இருந்து மகாராஷ்டிரா தலைநகர் மும்பை நோக்கி ஒரு விமானம் சென்று கொண்டிருந்தது.  இந்த விமானத்தில் ஜான் டிசௌசா (49), தத்தாத்ரேய் பபர்தேகர் (47) ஆகிய இருவரும் பயணித்துள்ளனர். இவர்கள் இருவரும் துபாயில் ஓராண்டு வேலை பார்த்துவிட்டு, சொந்த ஊருக்கு செல்வதற்காக இன்டிகோ விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

இதனை கொண்டாடும் விதமாக துபாயில் இருந்து மதுபாட்டில்களை இருவரும் வாங்கிக் கொண்டு விமானத்தில் ஏறியுள்ளனர். துபாயில் இருந்து நேற்று காலை 8 மணிக்கு இந்த விமானம் புறப்பட்டது. அப்போது அந்த இரண்டு நபர்களும் பையில் வைத்திருந்த மதுபாட்டில்களை எடுத்து குடிக்கத் தொடங்கினர். இதனால் அருகில் இருக்கும் சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சக பயணிகள், பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்களிடம் புகார் அளித்தனர். இதனை அடுத்து, விமான ஊழியர்கள் இதுபோன்று செய்யக்கூடாது என்று கூறியுள்ளனர்.

விமானத்தில் இதுபோன்று விதிமீறலில் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர். ஆனால் துபாயில் இருந்து ஏறிய அந்த  பயணிகள், பணிப்பெண்கள் சொல்வதை கேட்காமல் மீண்டும் குடிக்கத் தொடங்கினர். குடிப்பது மட்டுமில்லாமல் சக பயணிகளையும் சரமாரியாக திட்டி, மதுபாட்டில்களுடன் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த விமானத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதனை அடுத்து, விமானம் மும்பையில் தரையிறங்கியதும் இருவரையும் சிஎஸ்ஐஎஃப் வீரர்களிடம் பணிப்பெண்கள் ஒப்படைத்தனர். இதனை அடுத்து, துபாயில் இருந்து விமானத்தில் ஏறி கலாட்டாவில் ஈடுபட்ட ஜான் டிசௌசா (49), தத்தாத்ரேய் பபர்தேகர் (47) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மற்ற பயணிகளிடம் மன்னிப்பு கேட்பதாக இன்டிகோ விமானம் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதிகாரிகளின் கூற்றப்படி, இந்த ஆண்டில் விமானத்தில் விதிமீறல் மீறியது ஏழாவது சம்பவம் ஆகும்.  முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பவர், ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

பெண் பயணி மீது சக பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை என ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் ரூ. 30 லட்சம் அபராதம் விதித்தது. பணியை செய்யத் தவறியதற்காக விமானத்தின் பைலட் - இன் கமாண்டின் உரிமம் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அதே நேரத்தில் ஏர் இந்தியா விமான சேவை இயக்குனருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement