மாநகராட்சியின் வாகன நிறுத்த இடங்களில் விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி வாகன நிறுத்த இடங்களில் விதி மீறும் வாகன உரிமையாளர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
வாகன நிறுத்தும் இடங்களில் விதிகளை மீறி வாகனங்களை நிறுத்தவது மற்றும் கட்டணம் செலுத்தாமல் செல்வோர் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி, காவல்துறையுடன் இணைந்து முடிவு செய்துள்ளது.
இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய பிரதிநிதிகள் இல்லாத ஆளுங்கட்சியாக மாறும் பாஜக: ரிப்போர்ட் சொல்வது என்ன?
மொத்தமாக சென்னை மாநகராட்சியில் உள்ள 80 வாகன நிறுத்த இடங்கள் தொடர்பான விவரங்களை மாநகராட்சியின் இணைய இணைப்பின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்றும் பொதுமக்கள் இது தொடர்பான புகாருக்கு 1913 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக வாகன நிறுத்த இடங்களில் முறையான விதிகள் பின்பற்றப்படாமல் இருப்பது தொடர்பாக புகார் எழுந்த நிலையில், காவல்துறையுடன் இது சம்பந்தமாக ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தி சென்னை மாநகராட்சி இந்த எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாநகர போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், பேருந்துகளை சாலையின் இடதுபுற ஓரமாக உரிய பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சாலையின் நடுவிலோ அல்லது பேருந்து நிறுத்தத்தை விட்டு சிறிது தூரம் தள்ளியோ பேருந்தை நிறுத்துவதால், பயணிகள் சிரமத்துடன் ஓடிச் சென்று பேருந்தினுள் ஏறும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
பயணிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலையும் சில நேரங்களில் மரண விபத்தும் ஏற்பட ஏதுவாகிறது. எனவே, அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களும் பேருந்தை சாலையின் இடதுபுற ஓரமாக உரிய பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கிவிட உத்தரவிடப்பட்டுள்ளது.
பேருந்தை சாலையின் நடுவில் பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்தக் கூடாது. பயணச்சீட்டு பரிசோதகர்களை முழுமையாக ஈடுபடுத்தி மாநகர போக்குவரத்துக் கழக பணச்சீட்டு வருவாய் முழுமையாக எய்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்