மேலும் அறிய

PPF கணக்கில் அதிக வட்டி பெற வேண்டுமா? ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் பணம் செலுத்துங்கள்.

ஒவ்வொரு மாதமும் ஒருவர் ரூ.12,500 என்ற கணக்கில் முதலீடு செய்தால் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம். இதுதான் இந்த திட்டத்தின் அதிகபட்ச முதலீட்டுத் தொகை.

தொழில் செய்வோர்களில் அதிக லாபம் பெற முயற்சிக்கும் பயத்தை போக்க முதலீட்டாளர்களுக்கு நீண்ட காலமாக நல்ல வருமானத்தை வழங்கி வரும் திட்டம் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் என்று சொல்லப்படுகிற பொது வருங்கால வைப்பு நிதி. இந்த திட்டத்தினை பிபிஎஃப் என்றும் அழைப்பார்கள். மத்திய அரசு வழங்கும் திட்டம் என்பதால் இதில் ஏராளமான முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர்.


PPF கணக்கில் அதிக வட்டி பெற வேண்டுமா? ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் பணம் செலுத்துங்கள்.

பிபிஎஃப் திட்டத்தின் முக்கிய நன்மை என்ன என தெரிந்துகொள்ளலாம். நாம் செய்யும் முதலீடு மற்றும் அதிலிருந்து கிடைக்கும் வட்டி ஆகிய இரண்டிற்குமே வரி இல்லை. ஆனாலும் ஒரு சிறு  முயற்சி செய்தால் தான் முழு பலனையும் பெற முடியும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் பணத்தை சரியாக அக்கவுண்டில் வரவு வைக்க வேண்டும். ஏனென்றால் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை அதன் பாதுகாப்பு மற்றும் வருமான வரி சலுகைகளுக்காகவே பலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். இதைத்தான் லாக்கின் காலம் என்று கூறுகிறோம். இந்த 15 ஆண்டுகளுக்கும் உங்களுடைய பணம் பிளாக் செய்யப்பட்டு இருக்கும். தேவைப்பட்டால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் 5 ஆண்டுகள் நீட்டித்துக் கொள்ளலாம். PPF திட்டத்திற்கு வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது.

ஒவ்வொரு சேமிப்பு திட்டத்திற்கும் அரசு வட்டி எவ்வளவு என்பதை நிர்ணயித்திருக்கும். அந்த வகையில் பிபிஎஃப் திட்டத்திற்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் அவ்வப்போது திருத்தம் செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ஆம் தேதி அன்று உங்களுடைய வட்டி பிபிஎஃப் அக்கவுண்டில் வரவு வைக்கப்படும், ஆனால் மாத வாரியாக தான் வட்டி கணக்கிடப்படுகிறது, எனவே டெபாசிட் செய்யும் நேரம் என்பது மிக மிக முக்கியம்.

நீங்கள் ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் முதலீடு செய்துவிட்டால், அந்த மாதத்தின் வட்டி கணக்கீட்டில் உங்கள் டெபாசிட் சேர்க்கப்படும். ஒரு வேளை இந்தக் காலக்கெடுவைத் தவறவிட்டால் அந்த மாத வட்டியை இழக்க நேரிடும். நீங்கள் ஜூன் 1 முதல் 5-ஆம் தேதிக்குள் பணத்தை டெபாசிட் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போதுதான் ஜூன் மாதத்திற்கான வட்டி கிடைக்கும். இல்லை என்றால் ஜூலை மாதத்தில் இருந்து தான் வட்டி கணக்கிடப்படும்.


PPF கணக்கில் அதிக வட்டி பெற வேண்டுமா? ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் பணம் செலுத்துங்கள்.

எனவே ஒவ்வொரு மாதமும் அந்த மாதத்தின் 5-ஆம் தேதிக்குள் முதலீடு செய்வது பிபிஎஃப் வருமானத்தை அதிகரிக்க உதவும். நீங்கள் PPF கணக்கில் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்து வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு மாதத்தின் ஐந்தாம் தேதி காலக்கெடுவை தவறவிட்டால் மீதமுள்ள 11 மாதங்களுக்கு மட்டும் தான் வட்டி கணக்கிடப்படும். ஒவ்வொரு மாதமும் ஒருவர் ரூ.12,500 என்ற கணக்கில் முதலீடு செய்தால் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம். இதுதான் இந்த திட்டத்தின் அதிகபட்ச முதலீட்டுத் தொகை. அதாவது ஒருவர் ரூ.1.5 லட்சத்திற்கும் மேல் பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யவே முடியாது.

இவ்வளவு தொகை முடியாது என்று நினைப்பவர்கள் 500 ரூபாய் கூட முதலீடு செய்யலாம். இதுதான் இந்த திட்டத்தின் குறைந்தபட்ச முதலீடு. ஆக மாதம் ஒருவர் ரூ.12,500 என்ற தொகையை 5-ஆம் தேதிக்குள் வரவு வைக்க வேண்டும். அப்படி வைத்தால் அந்த 1 வருடத்திற்கு ரூ.1.50 லட்சம் என்ற கணக்கில், 7.1% வட்டி விகிதத்தில் மொத்தமாக 12 மாதங்களுக்கான 10,650 ரூபாய் வட்டி கிடைக்கும். அதுவே 5-ஆம் தேதிக்கு பிறகு வரவு வைத்தால் 11 மாதங்களுக்கு மட்டுமே வட்டி கணக்கிடப்பட்டு ரூ.9762.50 கிடைக்கும். எனவே பிபிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்பவர்கள், இதுபோன்ற சிறு சிறு விஷயத்தை கருத்தில் கொண்டால், நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வதன் முழுப் பலனையும் பெற முடியும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!
Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!
Jothimani MP: பாஜகவை முதல்ல பாருங்க.. அப்புறம் குறை சொல்லுங்க.. நயினாருக்கு ஜோதிமணி பதிலடி!
Jothimani MP: பாஜகவை முதல்ல பாருங்க.. அப்புறம் குறை சொல்லுங்க.. நயினாருக்கு ஜோதிமணி பதிலடி!
மதுரையில் உலக தரத்தில் உருவான பிரம்மாண்ட கட்டடம்... என்ன வசதிகள் உள்ளது முழு விவரம் !
மதுரையில் உலக தரத்தில் உருவான பிரம்மாண்ட கட்டடம்... என்ன வசதிகள் உள்ளது முழு விவரம் !
தென்மேற்கு பருவமழை இன்று முதல் தீவிரம்! தமிழ்நாடு, கர்நாடகத்திற்கு வானிலை எச்சரிக்கை!
தென்மேற்கு பருவமழை இன்று முதல் தீவிரம்! தமிழ்நாடு, கர்நாடகத்திற்கு வானிலை எச்சரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
Embed widget