கோல்கேட் பாமோலிவ் நிறுவனம், நியாயமற்ற முறையில் விலை நிர்ணயம் செய்வதால் மகாராஷ்டிர மாநிலத்தில் விநியோகம் செய்யப் போவதில்லை என (அகில இந்திய நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு - AICPDF) விநியோகிஸ்தர்கள் சங்கம் தெரிவித்தது. பின்னர் அந்த நிறுவன பொருட்களின் விற்பனையை ரத்து செய்யப் போவதாக  அறிவித்திருந்தது. இந்நிலையில் விநியோகிஸ்தர்கள் சங்கம் கோரிக்கையை ஏற்ற கோல்கேட் நிறுவனம் பேச்சுவார்த்தை மூலம் சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இந்தியாவின் பல பகுதிகளில் செயல்பட்டு வரும் மளிகைக் கடைகள், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விற்பனை செய்துவருவதால் ரெக்கிட் பென்கிஸர், யுனிலீவர், கோல்கேட் போன்ற நிறுவனங்களின் விற்பனையில் 20 முதல் 25 சதவீதம் சரிந்திருப்பதாக, கடந்த நவம்பரில் செய்திகள் வெளி ஆகியது.


இதையடுத்து, ரிலையன்ஸ் போன்ற பெரு நிறுவன விநியோக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அதே விலை நிர்ணயம் தங்களுக்கும் செய்யப்படாவிட்டால், மளிகைக் கடைகளுக்கு விநியோகம் செய்வதை நிறுத்திவிடுவோம் என விற்பனைப் பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிர மாநிலத்தில் ஜனவரி 1 முதல் கோல்கேட் நிறுவனத்தின் சில தயாரிப்புகளின் விநியோகத்தை நிறுத்திவிடப்போவதாக, பல விநியோகஸ்தர்கள் கடந்த வாரம் கூறியிருந்தனர்.


ஜியோமார்ட் பார்ட்னர் செயலி மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு விலையில் தள்ளுபடி வழங்கப்படுவதால், பல கடைகள் அதில் ஆர்வம் காட்டுகின்றனர் . இதனால் 4.5 லட்சம் விற்பனைப் பிரநிதிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் விநியோகஸ்தர்கள் தெரிவித்திருந்தனர்.


நாட்டிலுள்ள விநியோகஸ்தர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கோல்கேட் நிறுவனம் கூறியது, இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிர மாநிலத்தில் விநியோகத்தை சீர்குலைப்பதாக அச்சுறுத்திய பின்னர், விலை நிர்ணயத்தில் நியாயமற்ற முறையில் நடத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது.


இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்த விநியோகஸ்தர்களுடன் ஆன பேச்சுவார்த்தை நேரடியாக நடைபெற்றது என்றும், மகாராஷ்டிர மாநிலத்தில் தங்கள் தயாரிப்புகளின் விநியோகம் தடைபடாமல் இருப்பதை உறுதிசெய்யப் போவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


பங்குச் சந்தைகளுக்கு கோல்கேட்-பாமோலிவ் இந்தியா அளித்த அறிக்கையில், “அதன் விநியோகஸ்தர்களுடன் அவர்களின் சவால்களைத் தீர்க்க நேரடியாக ஈடுபட்டு வருகிறது. அந்த நிறுவனம் அதன் தயாரிப்புகளின் விநியோகம் மாநிலத்தில் தடையின்றி இருப்பதை உறுதி செய்யும்” என்று கூறப்பட்டுள்ளது.


அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கோல்கேட் பால்மோலிவ் நிறுவனம் சர்வதேச சந்தையில் உயர் மதிப்புடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண