பீகாரில் 10வது முறையாக பதவியேற்றுள்ள நிதிஷ்குமாரின் சம்பள விவரம் தொடர்பான தகவல் வெளியாகி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement


பீகார் மாநில நிலவரம் 


243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் 4 மற்றும் 11ம் தேதி என  இருக்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. அதேசமயம் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து தேர்தலில் களமிறங்கியது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பீகார் தேர்தலில் வழக்கத்தை விட அதிகளவில் வாக்குப்பதிவு இருந்தது. குறிப்பாக பெண்களின் வாக்கு சதவிகிதம் உயர்ந்திருந்தது. அதற்கு காரணம் தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு மகளிருக்கு ரூ.10 ஆயிரம் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டது காரணம் என சொல்லப்பட்டது. 


எதிர்பாராத தேர்தல் முடிவுகள் 


இந்த நிலையில் நவம்பர் 14ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. 122 இடங்கள் வெற்றி பெற்றால் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் யாருக்கும் அது கிடைக்கவில்லை. மாறாக ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி எதிர்பார்த்ததை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 89 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 25 இடங்களிலும், லோக் ஜனசக்தி கட்சி 19 இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் 6 இடங்களிலும், ஓவைசியின் AIMIM கட்சி 5 இடங்களிலும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்சா 5 இடங்களிலும் வெற்றி பெற்றது. 


10வது முறையாக முதலமைச்சர்


ஐக்கிய ஜனதா தளம், பாஜக இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக நிதிஷ் குமார் அறிவிக்கப்பட்டிருந்தார். அவர் 10வது முறையாக நவம்பர் 20ம் தேதி முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். அவருடன் சேர்ந்து 22 அமைச்சர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கு விரைவில் துறை ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நிதிஷ்குமார் சம்பள விவரம் 


இந்த நிலையில் நிதிஷ்குமாரின் சம்பள விவரம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவர் ரூ.2.5 லட்சம் பெறுவார் என கூறப்படுகிறது. மேலும் அரசு பங்களா, இசட் பிளஸ் பாதுகாப்பு, அலுவலக செலவு, அரசு வாகனம், எம்.எல்.ஏ. கொடுப்பனவு ஆகியவை சம்பந்தப்பட்ட தொகை தனியாக வழங்கப்படும். 


அதேசமயம் அமைச்சர்களுக்கு மாத சம்பளம் ரூ.65 ஆயிரம் மற்றும் கொடுப்பனவு ரூ,70 ஆயிரம் ஆகியவை வழங்கப்படுகிறது. நிதிஷ் குமாரின் எம்.எல்.ஏ. ஓய்வூதியம் ரூ.45 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை தான் அவர் முதன்முதலில் 1985 ஆம் ஆண்டு எம்.எல்.ஏ. ஆகும்போது பெற்ற சம்பளமாகும். 


பீகார் எம்.எல்.ஏ.க்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.50 ஆயிரம், தொகுதி படிகள் ரூ.55 ஆயிரம், தனிப்பட்ட உதவியாளர் சம்பளம் ரூ.40 ஆயிரம், எழுதுபொருட்களுக்கு ரூ.15 ஆயிரம் ஆகியவை வழங்கப்படும். சட்டப்பேரவை கூட்டங்களின் போது நாள் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.