ஜார்க்கண்ட் மாநில சுகாதார அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான பன்னா குப்தா ஒரு பெண்ணுடன் வீடியோ சாட் செய்வதாகக் கூறப்படும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பாஜகவின் ஜார்க்கண்ட் பிரிவு அவர் மீது விமர்சனங்களை வைக்கத் தொடங்கி உள்ளது. மேலும் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. 


பெண்ணுடன் விடியோ கால் பேசும் அமைச்சர் வீடியோ


ஒரு பெண்ணுடன் விடியோ காலில் ஆபாசமாக பேசுவது போன்ற அந்த வீடியோ காட்சிகள் போலியானது என்றும், எடிட் செய்யப்பட்டது என்றும் அமைச்சர் உடனடியாக விளக்கம் அளித்துள்ளார். மாநில சுகாதார அமைச்சரின் வீடியோ சாட் குறித்து விமர்சித்து, அவரைத் தாக்கிய பாஜக, அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரியது.






காங்கிரஸ் நிலைப்பாட்டை கூற வேண்டும்


ஒரு பெண்ணுடன் அமைச்சர் பன்னா குப்தா வீடியோ காலில் பேசுவது போன்ற வைரலான கிளிப்பைப் பகிர்ந்துள்ள ஜார்கண்ட் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, இந்த வீடியோ காங்கிரஸின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியதாகக் கூறினார். ANI இடம் பேசிய ஜார்கண்ட் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதுல் ஷாதியோ, "ஆபாசமான மற்றும் ஆட்சேபனைக்குரிய" வீடியோ குறித்து காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.


தொடர்புடைய செய்திகள்: KKR vs CSK, IPL 2023 Highlights: சரணடைந்த கொல்கத்தா.. 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி .. புள்ளிப்பட்டியலில் முதலிடம்..!


பதவி விலக வேண்டும்


"சுகாதார அமைச்சரைக் காட்டுவதாகக் கூறப்படும் வைரலான வீடியோ மிகவும் ஆட்சேபனைக்குரியது. கிளிப்பின் உண்மைத்தன்மை இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். அவர் முதல்வர் தலைமையிலான மாநில அமைச்சரவையில் உறுப்பினராக இருப்பதால் இதற்கு பதிலளிக்க கடமைப் பட்டுள்ளார். மத்திய அமைச்சர் ஹேமந்த் சோரன் வெளியிட்டுள்ள இந்த கிளிப் உண்மையானதா அல்லது போலியானதா என்பதைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடுவது முதல்வரின் பொறுப்பு" என்று ஷாதியோ கூறினார். மேலும் இந்த குறிப்பிட்ட வீடியோ உண்மையானது என தெரியவந்தால், அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் கூறினார்.



பன்னா குப்தா கருத்து


இதற்கிடையில், மாநில சுகாதார அமைச்சர் பன்னா குப்தா, பிஜேபியின் பழிவாங்கும் அரசியல் என்று கூறி பதிலடி கொடுத்தார். வீடியோ கிளிப் அவரது இமேஜைக் கெடுக்கும் "சதி"யின் ஒரு பகுதியாகும் என்று கூறினார். அவர் பேசியாதாக கூறப்படும் வீடியோ சாட் எடிட் செய்யப்பட்டது என்று கூறிய அமைச்சர், இந்த விவகாரத்தில் ஏற்கனவே எஃப்ஐஆர் பதிவு செய்துவிட்டதாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். "ஒரு போலியான மற்றும் எடிட் செய்யப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வேண்டுமென்றே பரப்பப்படுகிறது. அந்த வீடியோ போட்டோஷாப் மூலமாகவோ, அல்லது வேறு ஏதேனும் எடிட்டிங் செயலி மூலமாகவோ எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் நான் ஏற்கனவே எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளேன். இதற்கு பின்னால் இருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். இது போலியான வீடியோ," என்று பன்னா கூறினார்.