டெல்லி போலீஸ் ஏஎஸ்ஐ போல் நடித்து, நொய்டா மற்றும் தலைநகர் அருகே உள்ள பிற இடங்களில் பொய் வழக்குகளில் சிக்க வைப்பதாக மிரட்டி பலரிடம் பணம் பறித்ததற்காக 27 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.


காதலியை கவர போலீஸ் வேடம்


குற்றம் சாட்டப்பட்டவர் பானிபட்டைச் சேர்ந்த ராகுல் சர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். நொய்டாவில் உள்ள செக்டார் 15ல் தங்கியிருந்தார். சர்மா ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஆனால் கொரோனா பரவல் காரணமாக நிறுவனம்  மூடியதால் வேலையை இழந்தார். தனது காதலியைக் கவருவதற்காக, அவர் டெல்லி போலீஸ் ஏஎஸ்ஐயாக நடிக்கத் தொடங்கினார் என்று கூறப்படுகிறது.


சிக்கியது எப்படி?


செக்டார் 15ல் உள்ள ஒரு ஹோட்டலின் ஊழியர்களுடன் சண்டையிட்டபோது அவர் கைது செய்யப்பட்டார்.  “ஒரு ஹோட்டல் காவலர் அவர் மீது சந்தேகம் அடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். அங்கு விரைந்த போலீஸ் ரோந்துக் குழு அவரை கைது செய்தது. அவர் காட்டிய அனைத்து ஆவணங்களும் போலியானது கண்டுபிடிக்கப்பட்டது” என்று நொய்டாவின் ஏடிசிபி ரன்விஜய் சிங் கூறினார். குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து இரண்டு போலீஸ் சீருடைகள், பதவி பேட்ஜ், போலி அடையாள அட்டை மற்றும் ஐபோன் ஆகியவற்றை போலீசார் மீட்டுள்ளனர்.




காதலியை சந்திக்க திட்டம்


விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர், மலேசியாவைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளரான தனது காதலியைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் அதிகாரி தெரிவித்தார்.  “அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் தனது வேலைக்காக மலேசியா சென்றார். கொரோனா காரணமாக, அவர் இந்தியாவுக்குத் திரும்ப முடியவில்லை. கடந்த வாரம், காதலி தனது காசியாபாத் வீட்டிற்கு வந்தார். இருவரும் புதன்கிழமை ஒரு சந்திப்பை நடத்த திட்டமிட்டனர். இதற்காக சர்மா காதலியை கவர போலீஸ் சீருடையை அணிந்திருந்தார்” என்று போலீஸ் அதிகாரி மேலும் கூறினார்.


போலி வழக்குகளில் சிக்க வைப்பதாக மிரட்டி பல நிறுவன உரிமையாளர்கள் உட்பட மக்களை சர்மா ஏமாற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண