மோச்சா சூறாவளி: மோச்சா புயல் வங்காள விரிகுடாவை நெருங்கி வரும் நிலையில், புயல்களுக்கு ஏன், எப்படி பெயர் சூட்டப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது.

Continues below advertisement

WMO/ESCAP உறுப்பு நாடுகளால் பின்பற்றப்படும் பெயரிடல் முறையின் கீழ், இப்புயல் சைக்ளோன் மோச்சா என்று அழைக்கப்படுகிறது என்பதை நாம்  கவனிக்க வேண்டும். மோச்சா என்பது சாக்லேட்-சுவை கொண்ட சூடான பானமாகும். இது காபியின் வகைகளுள் ஒன்றாகும். காப்பி வர்த்தகத்திற்கு பெயர் பெற்ற செங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள யேமன்  நாட்டினால் மோச்சா என்ற பெயர் வழங்கப்பட்டது

 2023 ஆம் ஆண்டின் முதல் சூறாவளி புயல் - இந்த வார இறுதியில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே 9 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு புயல் உருவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. "இந்த அமைப்பு தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அதன் பாதை மற்றும் தீவிரம் குறித்த விவரங்கள் வழங்கப்படும்” என்று IMD தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

WMO/ESCAP உறுப்பு நாடுகளால் பின்பற்றப்படும் பெயரிடல் முறையின் கீழ், இப்ப்புயல் சைக்ளோன் மோச்சா என்று அழைக்கப்படுகிறது.  காபி வர்த்தகத்திற்கு பெயர் பெற்ற செங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள யேமனால் மோச்சா என்ற பெயர் வழங்கப்பட்டது. மோக்கா, மோச்சா அல்லது முக்கா என்றும் உச்சரிக்கப்படுகிறது, இது யேமன் நாட்டின் செங்கடல் கடற்கரையில் உள்ள ஒரு துறைமுக நகரமாகும்.

2018 இல், சூறாவளிகளுக்கான பெயர்களை முடிவு செய்ய ஒரு  ஒருங்கிணைந்த குழு அமைக்கப்பட்டது. இக்குழு 13 நாடுகளைக் கொண்டுள்ளது-

இந்தியாபாகிஸ்தான்பங்களாதேஷ்மியான்மர்ஓமன்மாலத்தீவுகள்ஏமன்இலங்கைதாய்லாந்துஈரான்ஐக்கிய அரபு நாடுகள்கத்தார்சவுதி அரேபியா

மேலே பட்டியலிடப்பட்ட நாடுகள் வட இந்தியப் பெருங்கடல், அரேபிய கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள சூறாவளிகளின் பெயர்களைத் தேர்ந்தெடுக்கின்றன. இந்தியாவின் பெயர்கள் கதி, தேஜ், முரசு, ஆக், வியோம், ஜார், ப்ரோபாஹோ, நீர், பிரபஞ்சன், குர்னி, அம்புட், ஜலதி மற்றும் வேகா ஆகும். 13 சூறாவளிகளுக்குப் பிறகு, பட்டியல் 1 முழுமையாகப் பயன்படுத்தப்பட்ட பிறகு, ​​பட்டியல் 2 ல்லிருந்து பெயரிடுதல் மீண்டும் தொடங்கும்.

சூறாவளியின் பெயர்கள் நடுநிலையானதாக இருக்க வேண்டும், புண்படுத்தும் வகையில்   இருக்க கூடாதுIMD இன் படி, சூறாவளிகளின் முன்மொழியப்பட்ட பெயர் அரசியல், அரசியல் பிரமுகர்கள், மத நம்பிக்கைகள், கலாச்சாரங்கள் மற்றும் பாலினத்திற்கு நடுநிலையானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்கள் உலகெங்கிலும் உள்ள எந்த ஒரு பிரிவினரின் உணர்வுகளையும் புண்படுத்தக் கூடாது. மேலும், இது  உச்சரிக்க எளிதானதாக இருக்க வேண்டும்  

அடுத்த சூறாவளிக்கு யார் பெயர் வைப்பார்கள்? அது என்ன அழைக்கப்படும்?அடுத்த சூறாவளிக்கு வங்கதேசம் பெயரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு 'பைபர்ஜாய்' என்று பெயரிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சூறாவளி மோச்சா: IMD முன்னறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு இந்தியாவில் மழை பெய்யக்கூடும் என்றும், மே 5 ஆம் தேதி western disturbance  ஏற்படக்கூடும் என்றும் ஐஎம்டி தெரிவித்துள்ளது. தி வெதர் சேனலின் கூற்றுப்படி, வங்காள விரிகுடாவில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் உள்ளது, .