இந்தியாவில் 12-18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி கோவாக்சின் தடுப்பூசியை 12 முதல் 18 வயதினருக்கு செலுத்த மத்திய அரசின் டிசிஜிஐ ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவின் பாரத் பயோடேக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசி முதலில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்படு வந்தது. அதைத் தொடர்ந்து 45 வயது முதல் 60 வயது வரை இருப்பவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த மே மாதம் முதல் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின்னர் பல்வேறு நபர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. கொரோனா பரவலின் இரண்டாவது அலைக்கு பிறகு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
தற்போது உலக முழுவதும் உருமாறிய ஒமிக்ரான் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் குழந்தைகளுக்கு வேகமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதன்பின்பு பாரத் பயோடேக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போட விரைவில் அனுமதி கிடைக்கும் என்ற தகவல் வெளியானது. இந்தச் சூழலில் தற்போது கோவேக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதலை தொடர்ந்து விரைவில் 12-18 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி விரைவாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்புதலுக்கு பிறகு விரைவில் அந்த வயது குழந்தைகளுக்கு எப்போது தடுப்பூசி செலுத்தப்படும் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கருதப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
"நாம் வழிவிட கூடாது” : உலகம் 4-வது பெருந்தொற்று அலையை சந்திக்கிறது - எச்சரிக்கும் மத்திய அரசு..