இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தடுக்கும் வண்ணம் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் அதிக அளவில் போடப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி வரும் 3ஆம் தேதி முதல் செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. 



இந்நிலையில் இன்று முதல் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் 15-18 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார். சென்னை மாந்தோப்பிலுள்ள பெண்கள் அரசினர் மேல்நிலை பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் 15-18 வயது உள்ள சிறுவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தப்படும் போது சிறுவர்கள் தங்களுடைய பெற்றோர்களுடன் வந்து செலுத்தி கொள்ளலாம் என்று தமிழ்நாடு சுகாதார சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


15 - 18 வயதுக்கு உட்பட்டோருக்கான கோவாக்சின் தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு https://www.cowin.gov.in/ என்ற இணையதளத்தில் நேற்று (ஜனவரி 1) தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முன்பதிவு நேற்று காலை தொடங்கியுள்ளது. அதில் சிறார்கள் தங்களது பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள அட்டையை கோவின் வலைதளத்தில் பதிவு செய்யும் போது பயன்படுத்திக்கொள்ளலாம்.


 





இதில் சிறார்கள் தங்கள் ஆதார் உள்ளிட்ட 9 ஐடி கார்டுகளில் ஒன்றை கொடுத்து ரிஜிஸ்டர் செய்ய முடியும். வயதானவர்கால் எப்படி ரிஜிஸ்டர் செய்தனரோ அதேபோல் செய்தால் போதும். அப்பா, அம்மாவின் போன் எண் கொடுத்து ஓடிபி மூலம் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். ஆனால் அதே சமயம் பலரிடம் ஆதார் இருக்காது. 18 வயது குறைவானவர்கள் என்பதால் வேறு அடையாள அட்டை இருக்காது. எனவே இவர்கள் பள்ளி ஐடி கார்டை பதிவேற்றினால் போதும். இதில் அவர்களின் பெயர்கள் மற்றும் 15-18 வயது கொண்டவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் விவரம் இருக்க வேண்டும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண 


மேலும் படிக்க: பெண்களின் திருமண வயது குறித்த மசோதாவை விவாதிக்கும் நிலைக்குழுவில் எத்தனை பெண் எம்.பிக்கள் தெரியுமா?