Covid-19 Cases LIVE: மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் இன்று ஆலோசனை

Covid-19 Cases LIVE: கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் அதுதொடர்பான தகவல்களை உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 23 Dec 2022 07:18 AM
மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் இன்று ஆலோசனை

மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 

பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் - பிரதமர் மோடி உத்தரவு

பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என பொதுமக்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். 

மருத்துவமனைகளை தயார் நிலையில் வையுங்கள் - பிரதமர் மோடி உத்தரவு

மருத்துவமனைகள், படுக்கைகள், ஆக்ஸிஜன் இருப்பு உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைக்கமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். 

உருமாறிய கொரோனாவால் அச்சப்பட வேண்டாம்.. நாங்கள் இருக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்பாக பொதுமக்கள் யாரும் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என, முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் புதிய வகை கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

நாட்டில் புதிய வகை கொரோனா பாதிப்ப அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அறிக்கை தாக்கல் செய்துள்ளார். 

புதிய வகை கொரோனா - சற்று நேரத்தில் முதலமைச்சர் ஆலோசனை

புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னும் சற்று நேரத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். 

Breaking Live : எந்தெந்த நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு?

 சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அதன்படி, தென்கொரியா, ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

விமான நிலையங்களில் பரிசோதனை - தமிழ்நாடு அரசு கடிதம்

விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார். 

குஜராத்தில் 2 பேர், ஒடிசாவில் ஒருவர் - இந்தியாவில் பரவிய புதிய வகை கொரோனா

குஜராத்தில் 2 பேர், ஒடிசாவில் ஒருவர் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. 

சர்வதேச விமான பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை - மத்திய அரசு தகவல்

இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனையை தொடங்க உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா இந்தியாவுக்கு பரவியது..!

சீனாவை அச்சுறுத்தி வரும் உருமாறிய கொரோனா வகையான ஒமிக்ரான் BF.7 பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுரை கூறியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். 

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா கட்டுப்பாடுகள்

கொரோனா தொற்று சீனாவில் அதிகரித்துள்ள நிலையில் அந்த நாட்டில் கட்டுப்பாடுகளை அந்த நாட்டு அரசாங்கம் தீவிரப்படுத்தி வருகிறது. 

Background

சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


மத்திய அரசு கடிதம்:







இந்நிலையில், இந்தியாவில் பரவுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.  அக்கடிதத்தில், சீனா, ஜப்பான், கொரியா, அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.






எனவே, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தியாவில் கோவிட்-19-னால் பாதிக்கப்பட்டவர்களின் மரபணு மாதிரிகளை பகுப்பாய்வு செய்யப்படுவது அதிகரிக்கப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் தெரிவித்துள்ளார்.


சுகாதார துறை அமைச்சர் திடீர் ஆலோசனைக் கூட்டம் 


மேலும் கொரோனா பாதிப்பு குறித்து, இந்தியாவில் மேற்கொள்ளும் நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில், அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் நாளை அவசர ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இந்தியாவில், கொரோனா தொற்றானது குறைந்து கொண்டே வருகிறது, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150க்கு கீழே உள்ளது.


இந்தியாவில் தொற்று பாதிப்பும் குறைந்தே காணப்படுவதால், அரசும் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. மேலும் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளதால் கொரோனா பாதிப்பு குறித்தான அச்சமின்றி மக்கள் வாழ ஆரம்பித்துவிட்டனர். 


இந்நிலையில், உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதார துறை, நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரிக்காத வகையில், மத்திய அரசு வரும் நாட்களில் தீவிர நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கலாம்.


Also Read: நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 220 கோடியைத் தாண்டியதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.