மஹாராஷ்ட்ர மாநிலம் நாசிக் ஜாகிர் உசேன் மருத்துவமனையில், மருத்துவ ஆக்சிஜன் நிரப்பும் பணியின்போது ஏற்பட்ட வாயுக்கசிவின் காரணமாக, போதிய ஆக்சிஜன் கிடைக்காததால் 22 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். 






இதுகுறித்துப் பேசியுள்ள மஹாராஷ்ட்ர சுகாதார அமைச்சர், ஆக்சிஜன் நிரப்பும்பணியின்போது வால்வுகளில் ஏற்பட்ட வாயுக்கசிவால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மொத்தம் 150 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக பேசிய மாநில உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை அமைச்சர் ராஜேந்த்ர சிங்னே, நாசிக் மருத்துவமனை சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறோம். இதற்கு காரணமான நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.


https://twitter.com/ANI/status/1384794047387082752