சிங்கங்களுக்கு கொரோனா; ஐதராபாத் உயிரியல் பூங்காவில் தனிமை

Corona crisis: கோவிட் பாதிப்புக்கு உள்ளான 8 சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன

FOLLOW US: 

Corona crisis:  ஐதராபாத் நேரு உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தெரிவித்தது.  

இந்த தொற்று மாறுபட்ட வகை கொரோனா அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் பாதிப்புக்கு உள்ளான 8 சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன என்றும் அவை வேகமாக குணமடைந்து வருகின்றன என்றும் தெரிவித்தது.  

இதுகுறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " ஐதராபாத், நேரு உயிரியல் பூங்காவில் உள்ள 8 சிங்கங்களுக்கு சுவாசப் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அந்த சிங்கங்களுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு  கடந்த ஏப்ரல் 24ம் தேதி அன்று சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி படுத்தப்பட்டதாக இந்த பரிசோதனையை மேற்கொண்ட சிசிஎம்பி-லாகோன்ஸ் மையம்  வெளியிட்ட அறிக்கையில்  தெரிவித்துள்ளது.

தற்போது அவை இயல்பாக நடமாடி, உணவு உண்பதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  உயிரியல் பூங்காவில் தடுப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே அமலில் உள்ளன.  தொற்று பாதிப்பை குறைப்பதற்காக உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்கு மூடப்பட்டுள்ளது.

சிங்கங்களுக்கு கொரோனா; ஐதராபாத் உயிரியல் பூங்காவில் தனிமை

கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ளதால், உயிரியல் பூங்காக்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், அனைத்து உயிரியல் பூங்காக்களுக்கும் வழங்கியுள்ளது.

கடந்தாண்டும் இதேபோல் உலகின் பல இடங்களில் உள்ள உயிரியல் பூங்காங்களில் விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.  ஆனால் விலங்குகளில் இருந்து இந்த தொற்று மனிதர்களுக்கு பரவும் என்பதற்கு எந்த உண்மையான ஆதாரமும் இல்லை. எனவே ஊடகங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன்,  பொறுப்பான முறையில் செய்திகளை வெளியிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றன" என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.   

Tags: 8 Asiatic lions in Hyderabad zoo test positive for Covid 19 Asiatic Lions Asiatic Lions tested Positive for COvid-19 Positive Asiatic Lions covid-19 positive CENTRAL ZOO AUTHORITY SARS CoV-2 in animals

தொடர்புடைய செய்திகள்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று 11805 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று 11805 நபர்களுக்கு புதியதாக கொரோனா

கொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..!

கொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..!

MOHFW on Vaccine doses: இந்தியாவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

MOHFW on Vaccine doses: இந்தியாவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஜூன் 21 வரை நீட்டிப்பு..!

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஜூன் 21 வரை நீட்டிப்பு..!

Hajj 2021 Cancelled: இந்தியர்களின் ஹஜ் புனிதப்பயண விண்ணப்பங்கள் ரத்து - ஹஜ் கமிட்டி குழு அறிவிப்பு

Hajj 2021 Cancelled: இந்தியர்களின் ஹஜ் புனிதப்பயண விண்ணப்பங்கள் ரத்து - ஹஜ் கமிட்டி குழு அறிவிப்பு

டாப் நியூஸ்

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

Sasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’ சசிகலாவின் அடுத்த ஆடியோ..!

Sasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’  சசிகலாவின் அடுத்த ஆடியோ..!