Congress On PM Modi: நேரு குடும்பத்தை விமர்சித்த பிரதமர் மோடிக்கும்,  காங்கிரஸ் ஆவேசமாக அபதிலடி தந்துள்ளது.


நேரு குடும்பத்தை சாடிய பிரதமர் மோடி:


மக்களவையில் நேற்று பேசிய பிரதமர் மோடி, “எதிர்க்கட்சியினர் மக்களவைக்கு பதில் மாநிலங்களவைக்கு செல்ல விரும்புவதாக கேள்விப்பட்டேன்.  காங்கிரஸ் தன்னை ஆட்சியாளர்களாகவும், பொதுமக்களை குறைந்தவர்களாக கருதுகின்றனர். காங்கிரஸ் கனவு காணும் திறனை கூட இழந்துவிட்டது. வரும் தேர்தலில் 400 தொகுதிகளில் பாஜக கூட்டணி  வெற்றி பெறும். முன்னள் பிரதமர் மோடி, இந்தியர்களை சோம்பேறி என குறிப்பிட்டுள்ளார். இந்திரா காந்தியும் அதே பாணியில் தான் மக்களை கையாண்டார். நாட்டை கொள்ளையடித்தவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள்” என காங்கிரஸ் கட்சியையும், நேரு குடும்பத்தையும் கடுமையாக பேசினார். அதோடு, ”பா.ஜ.க.வின் 3வது ஆட்சியில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக  இந்தியா உருவெடுக்கும், அடுத்த 1000 ஆண்டுகளுக்கான அடித்தள திட்டங்களை உருவாக்குவோம்” என்றும் பிரதமர் மோடி பேசியிருந்தார்.






பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பதிலடி: 


நேரு குடும்பம் தொடர்பாக பிரதமர் மோடியின் கருத்துக்கு பல்வேறு, காங்கிரஸ் தலைவர்களும் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “பிரதமர் நேற்று மக்களவையில் தனது முட்டாள்தனத்தின் மோசமான நிலையில் இருந்தார். சந்தேகத்திற்கு இடமின்றி இன்று ராஜ்யசபாவில் மீண்டும் ஒரு நிகழ்ச்சியை நடத்துவார். அவர் ஆழ்ந்த பாதுகாப்பின்மை மற்றும் சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளார். இது அவரை நேருவை அரசியல் ரீதியாக அல்லாமல், தனிப்பட்ட முறையில் தீய முறையில் விமர்சிக்க வழிவகை செய்கிறது.


வாஜ்பாயும், அத்வானியும் இதைச் செய்யவில்லை. ஆனால் திரு. மோடி தன்னை தானே புத்திசாலி என்று நினைக்கிறார். ஆனால் உண்மையில் தான் வகிக்கும் பதவியை அவர் இழிவுபடுத்துகிறார். மெகலோமேனியா (சக்திவாய்ந்த நபர் என்ற மாயமான நம்பிக்கை) மற்றும் நேருபோபியா ஆகியவை இந்தியாவில் ஜனநாயகக் கொலைக்கு வழிவகுக்கும் ஒரு நச்சு கலவையாகும். இந்திய மக்கள், குறிப்பாக இளைஞர்கள், இதுவே பிரதமராக மக்களவையில் மோடியின் கடைசி உரையாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளனர். 10 ஆண்டு கால மோசமான ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்” ஜெய்ராம் ரமேஷ் ஆவேசமாக விமர்சித்துள்ளார்.