Commercial LPG Cylinder: காலையிலேயே நல்ல சேதி - வணிக சிலிண்டரின் குறைப்பு..! எவ்வளவு தெரியுமா?

Commercial LPG Cylinder: வணிக சிலிண்டர்களின் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.

Continues below advertisement

Commercial LPG Cylinder: வணிக சிலிண்டர் விலை 57 ரூபாய் குறைக்கப்பட்டு இருப்பது வணிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

வணிக சிலிண்டர் விலை குறைப்பு:

கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் சர்வதேச சந்தை மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின்  விலையை நிர்ணயிக்கின்றன. அந்த வகையில், 19 கிலோ எடைகொண்ட வணிக சிலிண்டரின் விலையில் 57 ரூபாயை  குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன் மூலம், 1, 999.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த சிலிண்டரின் விலை தற்போது 1,942 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வாடிக்கையாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வந்த விலை: 

கடந்த இரண்டு மாதங்களாக வணிக சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது அதன் விலை குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக நவம்பர் 1ம் தேதி 101 ரூபாய் 50 காசுகளும், அக்டோபர் மாதம் 1ம் தேதி 209 ரூபாயும் உயர்த்தப்பட்டது. இரண்டு மாதங்களில் 310 ரூபாய் அளவிற்கு விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 57 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.  அதன்படி, சென்னையில் இன்று (நவம்பர் 16ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 544வது நாளாக தொடர்கிறது. வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்படவில்லை. 918.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு ஏற்பட மாறுபடும்.

சிலிண்டர் விலை விவரம்:

LPG சிலிண்டர் முக்கியமாக உள்நாட்டு மற்றும் உள்நாட்டு நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்கள் முறையே 5 கிலோ, 14.2 கிலோ மற்றும் 19 கிலோவில் கிடைக்கின்றன.  இந்திய குடும்பங்கள் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வரை மானிய விலையில் வாங்கிக் கொள்ளலாம். 13வது சிலிண்டரில் இருந்து மானியம் அல்லாத விலையில் வசூலிக்கப்படும். திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) என்பது பியூட்டேன் மற்றும் புரொப்பேன் ஆகியவற்றின் கலவையாகும். இது உடனடியாக திரவமாக்கப்பட்டு, சமையல் மற்றும் வெப்பமூட்டும் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் வாயுவின் பாதுகாப்பான வடிவமாகும். எல்பிஜி நீராவி காற்றை விட கனமானது மற்றும் அது தாழ்வான இடங்களில் குடியேறுகிறது. எல்பிஜி ஒரு மெல்லிய வாசனையைக் கொண்டிருப்பதால், கசிவு ஏற்பட்டால் வாயு வாசனையை எளிதாகக் கண்டறிய மெர்காப்டன் எனப்படும் நாற்றம் அதில் சேர்க்கப்படுகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola