உத்தரகண்ட் மாநிலத்தை மேகவெடிப்பு அடிக்கடி தாக்கி வருகிறது. நேற்று இரவில் ஏற்பட்ட மேகவெடிப்பால், அம்மாநிலத்தின்டேராடூன் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

இரவு முழுவதும் பெய்த கனமழை - 5 பேர் பலி

உத்தரகண்ட்டில், பல்வேறு இடங்களில் இரவு முழுவதம் கனமழை பெய்ததால், சாலைகள், வீடகள், கடைகள் என அனைத்தும் சேதமடைந்துள்ளன. மேலும், பாலம் ஒன்றும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த கனமழை வெள்ளத்தின் காரணமாக, நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

டேராடூனில் பேரழிவை ஏற்படுத்திய மேகவெடிப்பு, நகரம் மற்றும் சஹஸ்த்ராதாரா, தபோவன் மற்றும் ஐடி பார்க் போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது.

Continues below advertisement

அதே நேரத்தில், கார்லிகாட் ஆறு நிரம்பி வழிந்ததில், டேரலாடூன்-ஹரித்வார் நெடுஞ்சாலையில் ஒரு பாலம் இடிந்து விழுந்தது. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 20-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. அவர்களை தேடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மீட்புப் பணிகள் தீவிரம்

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 400 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அதோடு, காணாமல் போனவர்களை தேடும் பணி, போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டேராடூனில் கடுமையாக பாதிக்கப்பட்ட மால்தேவ்தா மற்றும் கேசர்வாலா பகுதிகளை, முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிடுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

மேகவெடிப்பால் ஏற்பட்ட இந்த கனமழையால், அம்மாநிலத்தின் பல்வேறு பகதிகளில் சாலைகள், பாலங்கள், அரசு சொத்துக்கள் அதிக அளவில் சேதமடைந்துள்ளன. மேலும், இதன் காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

மேக வெடிப்பு என்பது என்ன.?

மேக வெடிப்பு என்பது ஒரு தீவிர வானிலை நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த மேகவெடிப்பின் போது, அது ஏற்படுகின்ற பகுதியில், மிகக் குறுகிய காலத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு மழை பெய்யும்.

பெரும்பாலும், ஒரு மணி நேரத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும். அதன் திடீர் தன்மை மற்றும் தீவிரம் காணமாக, சில நேரங்களில் இது ‘மழை குண்டு‘ என்றும் விவரிக்கப்படுகிறது.

மேக வெடிப்புகள் பொதுவாக மலைப்பகுதிகளால் சிக்கிக்கொள்ளும் ஈரப்பதமான காற்றின் வலுவான மேல்நோக்கிய நீரேட்டங்களால் ஏற்படுகின்றன. இவை, மேகங்கள் சிதறுவதை தடுக்கின்றன. இனி குவியும் ஈரப்பதத்தை மேகம் தக்கவைக்க முடியாத நியில், அது அதை ஒரே நேரத்தில் வெளியிடுகிறது. இதனால், ஆறுகள், ஓடைகள் மற்றும் வடிகால் அமைப்புகள் மூழ்கும் நிலை ஏற்படும்.

உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு பகுதிகள் உட்பட, இந்தியாவின் இமயமலைப் பகுதியில் மேக வெடிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.