Chief Justice B R Gavai : விஷ்ணு சிலையை மறுகட்டமைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தபோது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அது தொடர்பாக விளக்கியிருக்கிறார்.

Continues below advertisement

 

விஷ்ணு சிலை விவகாரம்:

மத்திய பிரதேசம் மாநிலம் சமத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள விஷ்ணு கோவிலில் சேதமடைந்த சிலையை மாற்றி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று மனுதாரர் ராகேஷ் தலால் கோரியிருந்தார். இது  யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள கஜுராஹோ கோயில் வளாகத்தின் ஒரு பகுதியான ஜவாரி கோயிலில் ஏழு அடி உயர விஷ்ணு சிலை ஆகும்.  இதை புனரமைத்து மீண்டும் நிறுவக் கோரிய மனு விசாரணைக்கு வந்த பொது  தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி தள்ளுபடி செய்தது. 

Continues below advertisement

தெய்வத்திடமே கேளுங்கள்:

இந்த மனுவை "விளம்பர நல வழக்கு" என்று அழைத்த தலைமை நீதிபதி, "இது முற்றிலும் விளம்பர நோக்கத்திற்காக தொடரப்பட்ட வழக்கு... தெய்வத்திடம் சென்று ஏதாவது செய்யச் சொல்லுங்கள். நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்று சொன்னால், நீங்கள் விஷ்ணுவிடம் சென்று பிராத்தனை செய்யுங்கள். இதற்கிடையில், நீங்கள் சைவ மதத்தை வெறுக்கவில்லை என்றால், நீங்கள் அங்கு சென்று வழிபடலாம்... கஜுராஹோவில் உள்ள மிகப்பெரிய சிவலிங்கங்களில் ஒன்றான மிகப் பெரிய சிவலிங்கம் உள்ளது அதை வழிபடுங்கள்” என்று கூறியிருந்தார்.

விவதத்தை கிளப்பிய இந்துத்துவவாதிகள்:

இந்த நிலையில் தலைமை நீதிபதியின் இந்த கருத்தை இந்துத்துவவாதிகள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யத்தொடங்கினர். மறுபுறம் பி.ஆர்.கவாய்-க்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகி ட்ரெண்டிங் ஆனது. மறுபுறம் ஒரு சிலர் கவாய் புத்த மதத்தைச் சேர்ந்தவர் அதனால் தான் அவர் இவ்வாறு பேசுகிறார் என்று ஒரு சிலர் பதிவுகள் வெளியிட்டனர்.

 

 நீதிபதி விளக்கம்:

இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில், “நான் தெரிவித்த கருத்துக்கள் சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பிட்ட முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக யாரோ ஒருவர் என்னிடம் கூறினார். நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்," என்று கூறியுள்ளார். பி.ஆர்.கவாய் கருத்துக்கு பல மூத்த வழக்கறிஞர்கள் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.