Rahul Gandhi: காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் முடிந்த அளவிற்கு விரைந்து சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்படும் என, அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 


சத்தீஸ்கர் தேர்தல்:


ஐந்த மாநில தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17 என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரசுக்கும், பாஜகவிற்கும் இங்கு நேரடிப்போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சத்தீஸ்கர் மாநிலம் கான்கேரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.  


மோடி ஏன் பயப்படுகிறார் - ராகுல் காந்தி


அப்போது, “ஓபிசிக்காக வேலை செய்கிறீர்கள் என்று சொன்னால் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஏன் பயப்படுகிறீர்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது எங்கள் அரசு நடத்திய தரவுகளை ஏன் வெளியிடவில்லை? ஒவ்வொரு உரையிலும் பிரதமர் மோடி ஓபிசி என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார், பிறகு ஏன் சாதிவாரி கணக்கெடுப்புக்கு பயப்படுகிறார். பிரதமர் மோடி எதைச் செய்தாலும் அதை அதானிக்காகவே செய்கிறார். நாங்கள் எதைச் செய்தாலும் அதை விவசாயிகள், பழங்குடியினர், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குச் செய்கிறோம். 


'90 அதிகாரிகளால் நடத்தப்படும் அரசு”


இந்திய அரசு 90 அதிகாரிகளால் நடத்தப்படுகிறது. கேபினட் செயலாளர்கள் தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார்கள். எல்லா பணமும், எல்லா முடிவுகளும் இந்த 90 பேரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. இந்த 90 பேரில் எத்தனை பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்? 3 மட்டுமே, 90ல் 3 மட்டுமே.  இந்தியாவில் ஓபிசி மக்கள் தொகை 5 சதவீதம் மட்டுமே உள்ளதா? இந்தியாவில் இந்த எண்ணிக்கை குறைந்தது 50-55 சதவீதமாக உள்ளது. ஓபிசி பிரிவினர் இதை தெரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவோம்.






விரைவில் சாதி வாரி கணக்கெடுப்பு - ராகுல்:


கடந்த தேர்தலில் நாங்கள் உங்களுக்கு 2-3 பெரிய வாக்குறுதிகளை அளித்தோம். விவசாயிகளின் கடின உழைப்பின் சரியான பலன், கடன் தள்ளுபடி, பாதி மின்சாரம் ஆகியவை இதில் அடங்கும். நாங்கள் உங்களுக்கு இந்த வாக்குறுதிகளை அளித்தபோது,  ​பிரதமரும், பாஜக மூத்த தலைவர்களும் இதைச் செய்ய முடியாது என்று கூறினர். aஅனால், காங்கிரஸ் ஆட்சி அமைந்த 2 மணி நேரத்திற்குள் அதற்கான் பணிகளை தொடங்கினோம்.  நான் பொய்யான வாக்குறுதிகளை வழங்கமாட்டேன். செய்வதை மட்டுமே சொல்வேன்.


ஆட்சியை நடத்த இரண்டு வழிகள் உள்ளன. மாநிலம் மற்றும் நாட்டின் பணக்காரர்கள் பயன்பெறுவது ஒரு வழி. இரண்டாவது நாடு மற்றும் மாநிலத்தின் ஏழை மக்கள் பயன்பெறுவது. எங்கள் அரசாங்கம் விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் வேலையில்லாதவர்களுக்கு உதவுகிறது.  மோடியின் அரசாங்கம் பெரிய வாக்குறுதிகளை அளிக்கிறது, ஆனால் அதானிக்கு உதவுகிறது. அவர்களால் விவசாயிகளின் கடன தள்ளுபடி செய்ய முடியாது. ஆனால், அதானியின் கடனை தள்ளுபடி செய்ய முடியும்” என ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.