இந்தியாவில்  74 ஆண்டுகளுக்கு பிறகு,  ஆப்பிரிக்க நாடாக நமீபியாவில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் குனோ-பால்பூர் தேசிய பூங்காவிற்கு 8 சிறுத்தைகள் நாளை கொண்டுவரப்பட உள்ளது. இதன் மூலம்  இந்தியாவில் மீண்டும் சிறுத்தைகள் எண்ணிக்கையை உயர்த்த வழிவகை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


எட்டு சிறுத்தைகளில் இரண்டு சிறுத்தைகளை  பிரதமர் நரேந்திர மோடி  பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று (நாளை) பூங்காவின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் விடுவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.


தென் ஆப்பிரிக்காவில் உள்ள நம்பியா(Namibia) நாடும் இந்தியாவும் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிறுத்தைகளை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (memorandum of understanding (MoU) ) கையெடுத்திட்டுள்ளன. இதன்படி, வரும் ஆகஸ்ட் 15- ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் (Madhya Pradesh) உள்ள குனோ தேசியப் பூங்காவிற்கு(Kuno National Park) சிறுத்தை அழைத்துவரப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.










 

 



 

ஏற்படும் குறித்த முழு விவரம்:

 

சிறுத்தை திட்டத்தின் தலைவரும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் செயலாளர் எஸ்.பி.யாதவ் ( SP Yadav) (Cheetah Project Chief and Member Secretary National Tiger Conservation Authority (NTCA)) இது தொடர்பாக ஏ.என்.ஐ. க்கு அளித்த பேட்டியில், நாளை இரண்டு சிறுத்தைகளை பிரதமர் மோடி விடுவிப்பார். முதலில் ஒரு சிறுத்தையை விடுவித்தவுடன், 70 மீட்டர் இடைவெளி விட்டு மற்றொரு சிறுத்தையை விடுவிப்பார். மற்ற சிறுத்தைகளும் அவர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் விடுவிக்கப்படும். நமீபியாவில் இருந்து போயிங் 747 முலம்  (cargo plane Boeing 747) சிறுத்தைஜள் இந்தியாவிற்கு அழைத்துவரப்பட உள்ளன. இந்த விமானம் நாளை காலை இந்தியாவை வந்தடையும் என்று அவர் தெரிவித்தார். 

 





 

மேலும், போயிங் 747 விமானம் நமீபியாவில் புறப்பட்டு நேராக இந்தியா வந்தடையும். இடையில், எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்த வேண்டிய அவசியம் இருக்காது; பெரிய இட வசதி கொண்ட விமானமும் கூட; இந்த சிறப்பு பண்புகள் காரணமாகதான் போயின் 747-ஐ சிறுத்தைகளை கொண்டுவருவதற்கு தேர்வு செய்தோம் என்றும் அவர் தெரிவித்தார். இந்தப் பயணத்தில் சிறுத்தையுடன் இந்திய வன துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள், வனதுறை ஆர்வலர்கள், சிறுத்தை பற்றி நன்கறிந்த நிபுணர்கள், இந்திய விஞ்ஞானிகள் மூன்று பேர், மருத்துவர்கள், உள்ளிட்டவர்கள் நமீபியாவில் இருந்து இந்தியா வரும்வரை உடன் இருப்பார்கள்.

 

 

சிறுத்தைகளுடன் நமீபியாவில் இருந்து இன்று மாலை புறப்படும் விமானம், நாளை காலை மத்திய பிரதேசத்தின் தலைநகரான குவாலியருக்கு வந்தடையும். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

சிறுத்தைகளின் கழுத்தின் ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் உதவியோடு செயற்கைக் கோள் மூலம் சிறுத்தைகள் கண்கானிக்கப்படும். அவர்கள் இருக்கும் இடம் குறித்து 24 மணி நேரமும் அப்டேட் கிடைக்கும். 

 

ஏற்கனவே, ஜெய்பூரின் வந்து களமிறங்கும் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது சிறுத்தை கொண்டுவரும்  விமானம் குவாலியர் வந்தடையும் என்று பயணத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. மேலும், இந்தியா வருவதற்கு சட்ட ரீதியிலான எல்லா நடைமுறைகளும் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 





 


இத்தோடு, ஆண்டுதோறும் 8 முதல் 10 சிறுத்தைகளை கொண்டு வருவதன் மூலம், 5 ஆண்டுகளில் 50 என்ற எண்ணிக்கையை எட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் சிறுத்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள்  குறைந்து கொண்டே வருகிறது.  உலகம் முழுவதும் சுமாா் 7,000 சிறுத்தைப் புலிகளே காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆப்பிரிக்க காடுகளிலேயே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


 




கறுப்பு நிறப் புள்ளிகள் உடல் முழுவதும் நிரம்பியிருக்க, அதிக வெப்பத்திலிருந்து கண்களைக் காக்க, எப்போதும் கண்ணீர் வழிவது போன்ற கறுப்பு நிறக் கோடுகளுடன் கூடிய மெலிதான உருவ அமைப்பு கொண்டது சிறுத்தைகள்.  மணிக்கு 70 மைல் (112 கிமீ) வேகத்தில் ஓடக்கூடிய திறன் வாய்ந்த பூனை வகையைச் சேர்ந்த விலங்கு, சிறுத்தை, இதுவும் புலியைப் போலவே பதுங்கிப் பாய்ந்து உணவை வேட்டையாடும் பழக்கமுடையது.


தென்னாப்பிரிக்காவில் இருந்து பல மைல்கள் கடந்து ஐந்து ஆண் மற்றும் மூன்று பெண் என மொத்தம் எட்டு சிறுத்தைகள் அழைத்துவரபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.