மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 % அளவுக்கு உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியானது 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Continues below advertisement

தீபாவளி பரிசாக அமைந்த அகவிலைப்படி

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 % உயர்த்துவதென அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA), மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR) அதிகரிப்பட்டதன் காரணமாக அரசு கருவூலத்திற்கு ஏற்படும் மொத்த வருடாந்திர நிதியிழப்பு ரூ.10,016 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இந்தத் திருத்தத்தின் மூலம் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைய உள்ளனர்.7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் பேரில் இந்தப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement