ஆன்லைன் உயிர்பலி..
ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் எனப் பிரபலங்கள் நடிக்கும் விளம்பரங்களைப் பார்த்து ஏராளமானோர் சூதாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் காரணமாகப் பலர் பணத்தை இழந்து பெரும் கடனாளியாகி தற்கொலைக்கும் தள்ளப்படுகின்றனர். சமீப நாள்களாக ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. அதனால் பல மாநில அரசுகள் அதனைத் தடைசெய்ய மசோதா நிறைவேற்றிவருகின்றன. தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களைச் சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டுமென அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
தமிழ்நாடு..
ஆனாலும், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆன்லைன் விளையாட்டுகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதை நம்பி பணத்தை இழப்பர்கள் ஏராளம். மேலும், இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையானர்களில் நிலை மோசமாகி வருகிறது. இதை நம்பி ஏமாந்து நடக்கும் தற்கொலைகளும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பல விடீயோ கேம்கள் விரை தடை செய்யப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார். தமிழக அரசும் ஆன்லைன் விளையாட்டை தடை செய்வதற்கான வேலையில் இறங்கியுள்ளது.
அதிரடி உத்தரவு..
இந்நிலையில், ஆன்லைன் தொடர்பான எந்த ஒரு விளம்பரத்தையும் ஒளிபரப்பக் கூடாது என மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டங்கள் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், சமூக சிக்கல்களை உண்டாக்குவதாகவும் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, அனைத்து அச்சு மற்றும் மின்னனு ஊடகங்கள் சூதாட்ட விளம்பரங்களை தவிர்க்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் சூதாட்டம் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் அது சட்டவிரோத செயல். இது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு பணம் மற்றும் நிதி தொடர்பாக சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இந்த ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்டவைகளை விளம்பரத்தக்கூடாது என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதே போல் சமூக வலைத்தளங்களும், இணையதள ஊடகங்கள் பொதுநலன் கருதி மற்றும் மக்கள் நலன் கருதி ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான எந்தவொரு விளம்பரத்தை பிரசுரிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்