SC on Caste Census: மக்கள் நலனுக்காக கொள்கை முடிவை மாற்றக்கூடாதா?- மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி..
மக்கள் நலனுக்காக கொள்கை முடிவை மாற்றக் கூடாதா என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த வழக்கில், மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மக்கள் நலனுக்காக கொள்கை முடிவை மாற்றக் கூடாதா என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த வழக்கில், மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் எஸ்சி, எஸ்டி போல ஓபிசி பிரிவினர் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
Just In




எனினும் ''மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஓபிசி பிரிவின் அடிப்படையில் கணக்கெடுப்பை நடத்த முடியாது. இது அரசின் கொள்கை ரீதியான முடிவு'' என்று மத்திய அரசு வாதிட்டது.
இதற்கு பதிலளித்த நீதிமன்றம், ''ஓபிசி பிரிவின் அடிப்படையில் ஏன் கணக்கெடுப்பை நடத்த முடியாது? 1951-ல் எடுக்கப்பட்ட கொள்கை ரீதியான முடிவை ஏன் மக்களின் நலனுக்கு மாற்றுவது குறித்துப் பரிசீலிக்கக் கூடாது?'' என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வழக்கு குறித்து மத்திய அரசு தரப்பில் கூடுதலாக பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் அளித்து, நவம்பர் 22ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.