சியாச்சின் பனியாறில் உள்ள குமார் போஸ்டில் உள்ள மிக உயரமான போர்க்களத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை கேப்டன் ஷிவா சவுகான் பெற்றார்.






இதுகுறித்து, இந்திய ராணுவத்தின் ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸின் அதிகாரப்பூர்வ கணக்கு ட்வீட் செய்தது. அதில்,


'பிரேக்கிங் தி கிளாஸ் சீலிங்'


 ஃபயர் அண்ட் ப்யூரி சப்பர்ஸின் கேப்டன் ஷிவா சவுகான், உலகின் மிக உயரமான போர்க்களத்தில் குமார் போஸ்டில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் அதிகாரி ஆனார்” என்று பதிவிட்டு இருந்தது. 


குமார் போஸ்டில் பணியமர்த்தப்படுவதற்கு முன்பு ஷிவா சவுகான் பல்வேறு கடினமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. 


சியாச்சின் பனிப்பாறை பூமியின் மிக உயரமான போர்க்களமாகும், அங்கு 1984 முதல் இந்தியாவும் பாகிஸ்தானும் இடையிடையே சண்டையிட்டு வருகின்றன. எட்டு சிறப்பு அதிகாரிகள் கொண்ட குழு கடந்த 2021  செப்டம்பர் மாதம் சியாச்சின் பனிப்பாறையில் 15,632 அடி உயரத்தில் குமார் போஸ்ட்டை அடைந்தபோது உலக சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.