புல்வாமாவில் தாக்கப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.  இந்த தாக்குதலுக்கு பதிலடியாக  பாகிஸ்தான் பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.  பாகிஸ்தானின் F16 ரக விமானத்தை அவர்களின் எல்லைக்குள் சென்று தாக்கினார் அபிநந்தன்.  இதில் கேப்டன் அபிநந்தன் சென்ற மிக் 21 ரக போர் விமானம் தாக்குதலுக்கு உள்ளானது. பாராசூட் மூலம் உயிர் தப்பிய அபிநந்தனர் பாக் எல்லையில் விழுந்தார். 


பாக் பிடியில் சிக்கிய அபிநந்தனை பின்னர் இந்தியாவின் பேச்சுவார்த்தை மூலம் பாகிஸ்தான் திருப்பி அனுப்பியது. இந்த சம்பவம் மூலம் பெரிய அளவில் பிரபலமானார் அபி நந்தன். அபிநந்தனின் மீசை இந்தியா முழுவதும் வைரலானது. இளைஞர்கள் பலரும் அபிநந்தன் மீசை ஸ்டைலை ஆர்வமாக வைத்துக்கொண்டனர். பின்னர் பாகிஸ்தான் சம்பவத்துக்கு பிறகு ஓய்வில் இருந்த அபிநந்தனுக்கு குரூப் கேப்டன் பதவி வழங்கப்பட்டது.


மத்திய குழு மழை பாதிப்புகளை ஆய்வுசெய்து மதிப்பிட நாளை புதுச்சேரிக்கு வருகை..


இந்நிலையில் வீர தீர செயல்களுக்கு வழங்கப்படும் வீர் சக்ரா விருது கேப்டன் அபிநந்தனுக்கு இன்று வழங்கப்படவுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த இந்த விருதை வழங்கவுள்ளார். டெல்லியில் எளிமையான முறையில் இன்று நடைபெறவுள்ள விழாவில் இந்த விருதை பெறுகிறார் அபிநந்தன். 


இறந்ததாக மார்ச்சுவரிக்கு அனுப்பப்பட்ட உடல்.. ஃப்ரீசர் பாக்ஸிலிருந்து உயிருடன் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்: என்ன நடந்தது?






.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


 


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


 


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


 


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


 


 


யூடியூபில் வீடியோக்களை காண