Breaking LIVE : உடற்பருமன் கொண்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. தமிழ்நாட்டில் இவ்வளவா? அதிர்ச்சி அறிக்கை..
Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.
உடற்பருமன் கொண்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. தமிழ்நாட்டில் இவ்வளவா? அதிர்ச்சி அறிக்கை..
இந்தியாவின் தென் மாநிலங்களில் உள்ள பெண்களின் உடல் பருமன் குறித்த புதிய ஆய்வறிக்கை ஐதராபாத்தில் உள்ள சமூக மேம்பாட்டு கவுன்சில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உடல் பருமன் மிக்க பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஜவகர் நகரில் பல்வேறு நலத்திட்டபணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.
குடிசை மாற்று வாரியம் நகர்புற மேம்பாட்டு வாரியமாக மாற்றப்பட்டுள்ளது.
வீடு என்பது ஒவ்வொருவரது கனவு அதை நிறைவேற்றுவதில் நாங்கள் இருப்பதில் மகிழ்ச்சி என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
111.80 கோடி செலவில் கட்டப்பட்ட 840 அடுக்குமாடி குடியிருப்புகளை கொளத்தூரில் முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை 10 மணிக்கு அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனை
மின்கட்டண உயர்வை கண்டித்தும் உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் செப்.16 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் : ஈபிஎஸ்
அதிமுக தலைமை அலுவலக சாவியை இபிஎஸ்க்கு வழங்கியதை எதிர்த்த ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்ற்ம்
ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் அஞ்சுமன் இண்டெஜமியா மஸ்ஜித் கமிட்டியின் மனுவை நிராகரித்தது வாரணாசி நீதிமன்றம்
ஞானவாபி மசூதியில் வழிபட அனுமதி வேண்டி மனு.. விசாரணைக்கு உகந்தது என தீர்ப்பு..
அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி தந்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை : உயர்நீதிமன்றம்
எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு
உலகிலேயே அதிகளவில் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறியிருக்கிறது : பிரதமர் மோடி
அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி டான்யா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
சென்னையில் வெள்ளி கிராமுக்கு1 0 காசுகள் உயர்ந்து ரூ. 60.50 ஆக விற்பனையாகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.37,800 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து 4,725 ஆக விற்பனையாகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 41,016 ரூபாயாகவும், ஒரு கிராம் 5,127 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
கூடலூர் - பந்தலூர் பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்து வருவதால் அப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது,
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் இரண்டாவது நாளாக நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதிக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. ஜனவரி 11ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது. ஜனவரி 12ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை மறுநாள் தொடங்குகிறது. ஜனவரி 13ஆம் தேதிக்கான முன்பதிவு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 14-ம் தேதி பயணிக்க விரும்புவோர் செப். 16-ம் தேதியும், ஜனவரி 15-ம் தேதி செல்வோர் செப்.17-ம் தேதியும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் இரண்டாவது நாளாக நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.
முகச்சிதைவு பிரச்னையை சரி செய்ய அறுவை சிகிச்சை மேற்கொண்ட திருவள்ளூர் சிறுமி இன்று மாலை மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.
Background
சென்னையில் 114வது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 114வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (செப்டம்பர் 12) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில்ன் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -