Breaking LIVE: அ.தி.மு.க.வில் இருந்து மைத்ரேயனை நீக்கம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு
Breaking LIVE : தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை செய்திகளாக உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள ஏபிபி நாடு பக்கத்தில் இணைந்திடுங்கள்
மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசு கல்வி நிறுவனங்களில் இந்தி மொழி கட்டாயம் என்று அமித் ஷா தலைமையிலான அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சியில் தி.மு.க. வின் பங்கு அளப்பரியது; தேய்ந்த தெற்கை, தலைநிமிர வைத்த பெருமை திராவிட முன்னேற்ற கழகத்திற்கு உண்டு என்று மு.க.ஸ்டாலின் உரையில் குறிப்பிட்டு உள்ளார்.
தி.மு.க.வினர் கழகத்தையும் தமிழகத்தையும் இரு கண்களாக கருத வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி கீழ்தரமான அரசியல் செய்கிறார்கள்; மதம் மற்றும் ஆன்மீக உணர்வை தூண்டி அதில் அரசியல் செய்கிரார்கள் பா.ஜ.கவினர். அவர்களுக்கு சொல்லிக்கொள்ள சாதனைகள் இல்லை என்பதால், தி.மு.க. பற்றி அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். கவனமாக இருக்கவும்.
நாம் ஒன்றிணைந்து உழைக்க வேண்டிய காலம் இது. கொள்கையை என்றும் மறந்துவிடக் கூடாது; கொள்கைக்காக சேரும் கூட்டமாக இருக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பேச்சு!
தமிழ்நாட்டின் முதலமைச்சரும், தி.மு.க.வின் தலைவருமான மு.க.ஸ்டாலின் பொதுக்குழு கூட்டத்தில் பேசி வருகிறார். அதில் “மக்களின் நம்பிக்கையை காப்பதே நம் கடமை; தி.மு.க. நிர்வாகிகள் தீவிரமாக பணி செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களுக்கு தி.மு.க. மீது நம்பிக்கை இருக்கிறது. இனிவரும் காலங்களில் தி.மு.க. நிரந்தரமாக ஆட்சியில் இருக்கும் என்று மு.க. ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.
தி.மு.க.-வில் உள்ள உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை என்பதை நான் கேள்விப்பட்டிருக்கேன். ஆனால், கட்சியின் வளர்ச்சிக்கு சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு இருப்பதே நல்லது.
சென்னை அமைந்தகரையில் நடைபெற்று வரும் பொதுக்குழு கூட்டத்தில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். தி.மு.க. கட்சி ஜனநாயகத்துடன் செயல்படுவதாக கூறியுள்ளார். மேலும், தி.மு.க. பழுத்த பழம் என்பதால், அதன் மீது கல் எறிவது வழக்கம்தான், ஆனால், அந்த கற்களை கொண்டே கோட்டை கட்டும் திறமை கொண்டவர்கள் உள்ள கட்சி.
அ.தி.மு.க.வில் இருந்து மைத்ரேயனை நீக்கி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர், நாகை, நீலகிரி, திருவாரூர் உள்ளிட்ட மாவடங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு 12 லட்சம் விளக்குகளை ஏற்றி வைக்கும் தீப உற்சவ விழாவுக்கு தயாராகிறது அயோத்தி நகரம்
பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது : திட்ட இயக்குநர் அர்ஜுனன்
புதிய விமான நிலையம் அமைய உள்ள பரந்தூருக்கு தனி வழித்தடம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. சிப்காட் சிறுசேரி - கேளம்பாக்கம், கேளம்பாக்கம்- கிளாம்பாக்கம், கிளாம்பக்கம் - தாம்பரம் - விமான நிலையத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம்
தமிழகத்தில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்ட இயக்கம் திமுக. கொள்கைகளை விட்டுக்கொடுக்காத இயக்கம் திமுக - கனிமொழி பேச்சு
தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
திராவிட முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர்களில் ஒருவராக எம்.பி. கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமைந்தகரையில் நடைபெற்று வரும் பொதுக்குழு கூட்டத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமைந்தகரையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் மீண்டும் இரண்டாவது முறையாக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை அமைந்தகரையில் தொடங்கியது. இரண்டாவது முறையாக தி.மு.க. வின் தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்.
இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கும் தி.மு.க. பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைந்தரைக்கு புறப்பட்டார்.
தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவள்ளூர், சென்னை, கடலூர், நாகை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றிய முன்னாள் டி.ஜி.பி. டி. முகர்ஜி காலமானார். சென்னை ராமாபுரம் அருகே மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார். இவர் 2006 முதல் 2007 ஆம் ஆண்டு வரை டி.ஜி.பி. ஆக பணியாற்றியவர்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மூத்த தலைவருமான குமரி அனந்தன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமமையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். அவருக்கு தனி வார்ட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து தீபக்சாஹர் காயத்தால் விலகிய காரணத்தால் அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளார்.
சீன விண்வெளி நிறுவனம் 2 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி அதன் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியது.
இஸ்ரேலில் வடகிழக்கு இந்தியாவை சேர்ந்த யூத இன இளைஜர் இயோல் லெகின்ஹல் கத்தியால் குத்தி கொலை - 8 சிறுவர்கள் கைது
23 மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Background
சென்னையில் 141வது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.
இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 141வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (அக்டோபர்.09) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் விலை உயர்த்தப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 12 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -