Breaking LIVE : சென்னையில் காலை முதல் மழை... தணிந்த வெப்பம்..

Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 05 Oct 2022 04:32 PM
Breaking LIVE : மேட்டூர் அணை - 16,701 கன அடி நீர்வரத்து 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 15,941 கன அடியிலிருந்து 16,701 கன அடியாக அதிகரித்துள்ளது

Breaking LIVE : 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு 

2022-ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வு குழு அறிவுப்பு. கரோலின் ஆர்.பெர்டோசி, மார்டென் மெல்டால், பேரி ஷார்ப்லெஸ் ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு. 

Breaking LIVE : அருவியில் தவறிவிழுந்து மாணவன் உயிரிழப்பு 

கொடைக்கானல் பேத்துப்பாறை ஐந்துவீடு அருவியில் தவறி விழுந்து 12-ம் மாணவன் பிரின்ஸ் உயிரிழப்பு. மாணவனின் உடலை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்

Breaking LIVE : விஜயதசமியையொட்டி மாணவர் சேர்க்கை

விஜயதசமியையொட்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று புதிய மாணவர்களை சேர்க்க ஏற்பாடு. பள்ளிகளில் ஒரு ஆசிரியராவது இருந்து மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

Breaking LIVE : 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை

கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

Breaking LIVE : வள்ளலாரின் முப்பெரும் விழா தொடக்கம்

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வள்ளலாரின் முப்பெரும் விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி  வைத்தார். வள்ளலார் ‘200’ இலட்சினை, அஞ்சல் உறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் 

Breaking LIVE : டெல்லியில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

டெல்லியில் இருக்கும் மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் - மாநில அரசு 

Breaking LIVE : இமாச்சலில் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர்  திறந்துவைத்தார்

இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

Breaking LIVE : மதத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : முதல்வர்

மதத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர்;ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல திமுக என முதல்வர் ஸ்டாலின் பேச்சு 

Breaking LIVE : சென்னை மற்றும் புறநகரில் தொடர்ந்து மிதமான மழை

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. கிண்டி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை.

Breaking LIVE : இந்தியாவில் ஒரே நாளில் 2,468 பேருக்கு கொரோனா

இந்தியாவில் ஒரே  நாளில் 2,468 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,01,943 ஆக அதிகரித்துள்ளது 

Breaking LIVE : இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.67க்கு விற்பனை செய்யப்படுகிறது

Breaking LIVE : தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.38,680க்கு விற்பனை செய்யப்படுகிறது 




Breaking LIVE : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை...

சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

Breaking LIVE : விஜயதசமியை முன்னிட்டு தமிழ்நாட்டில் சிறப்பு மாணவர் சேர்க்கை

தமிழ்நாட்டில் இன்று விஜயதசமியை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 

Breaking LIVE: புதிய தேசிய கட்சி அறிவிப்பு.. இன்று வெளியிடும் தெலங்கானா முதல்வர்..

புதிய தேசிய கட்சியின் அறிவிப்பை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் இன்று வெளியிட உள்ளார்.

Breaking LIVE: உத்தரகாண்ட் பேருந்து விபத்து.. 25 பேர் பலி

உத்தரகாண்டில் பேருந்து பள்ளத்தில் கவிழந்து 25 பேர் உயிரிழப்பு

Breaking LIVE: ஹிமாச்சலப் பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கும் பிரதமர்..

ஹிமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் இன்று எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளார்.

Breaking LIVE: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கவுன்சிலிங் அக்டோபர் 11ஆம் தேதி...

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் அக்டோபர் 11ஆம் தேதி தொடங்குகிறது.

Breaking LIVE : நவராத்திரியின் 10வது நாளான இன்று விஜயதசமி கொண்டாட்டம்..

நவராத்திரியின் 10வது நாளான இன்று விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது.

Background

சென்னையில் 137ஆவது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு  நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.  இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 137ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (அக்டோபர் 5) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.


தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் விலை உயர்த்தப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.


பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 12 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.