Breaking LIVE : விஜயதசமி சிறப்பு ஏற்பாடு : அரசுப்பள்ளிகளில் நாளை மாணவர் சேர்க்கை...!
Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.
விஜயதசமியை முன்னிட்டு நாளை அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் நிவாரணம் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தருமபுரம் ஆதீனத்தில் ஆயுதபூஜை விழா: கடந்த மே மாதம் இந்தியாவின் பேசுபொருளாக விளங்கிய பட்டணப் பிரவேசத்துக்கு பயன்படுத்தும் சிவிகைப்பல்லக்கு மற்றும் நாற்காலி பல்லக்கு, பிரயாண பல்லக்கு, வெள்ளிப்பல்லக்கு, ஈட்டி, வாள், துப்பாக்கி, எடுபிடி உள்ளிட்ட ஆதீனத்தில் பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தபட்டுவரும் தொன்மைவாய்ந்த பொருட்களுக்கும், பழைமையான ஆதீன நூல்களுக்கும் சிறப்பு பூஜை:- பார்வதி, லெட்சுமி, சரஸ்வதி உருவத்தை ஆவாகனம் செய்து தருமபுரம் 27-வது ஆதீனகர்த்தர் சிறப்பு வழிபாடு!
காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கத்தில் ஜீவானந்தம் என்பவரது ASN என்ற சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம்; பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ.38,200 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.4,775 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 41,416 ரூபாயாகவும், ஒரு கிராம் 5,177 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில் வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் 2 காசுகள் உயர்ந்து ரூ.66.70 ஆக விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.66,700 ஆக விற்பனையாகிறது.
குமரி கடல் பகுதியில் இன்று கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன்காரணமாக மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை.
ஜம்மு-காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனியார் மயமாக்கலை எதிர்த்து கடந்த 6 நாட்களாக மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட வந்த நிலையில் இன்று முதல்வர், அமைச்சர்களுடன் மின்துறை ஊழயர்கள் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து தற்காலிகமாக தங்களின் போரட்டத்தை வாபஸ் பெறுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வருகின்ற 9ம் தேதி மிலாடி நபி அன்று மதுக்கடையில் மூட கலால் துறை உத்தரவு
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3வது டி20 போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் இன்று மாலை 7. 30 மணிக்கு தொடங்குகிறது.
Background
சென்னையில் 136ஆவது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 136ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (அக்டோபர் 4) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் விலை உயர்த்தப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 12 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -