Breaking Live: ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் பணியிட மாற்றம்

Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 31 Oct 2022 06:31 PM
Breaking Live: ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் பணியிட மாற்றம்

New IPS transfers and postings in Tamil Nadu: தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேரை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. சிறைத்துறை டிஜிபியாக இருந்த அம்ரேஷ் புஜாரி நியமனம், சிபிசிஐடி, ஏடிஜிபியாக அபய்சிங் குமார் நியமனம்.

குஜராத் பால விபத்து: பிரதமர் மோடி நாளை நேரில் ஆய்வு

குஜராத்தின் மோர்பி பகுதியில் தொங்கு பாலம் அறுந்து நேரிட்ட விபத்தில் 130-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த இடத்திற்கு பிரதமர் மோடி நாளை நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளார்.

அயர்லாந்துக்கு எதிரான ஆட்டம்-ஆஸ்திரேலியா பேட்டிங்

ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று குரூப் 1 பிரிவில் 31ஆவது ஆட்டம் தொடங்கவுள்ளது. இன்றைய ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவும், அயர்லாந்தும் மோதுகின்றன.


அயர்லாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த ஆட்டம் பிரிஸ்பேனில் நடைபெறுகிறது.ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில், வார்னர், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சிறையில் உயிரிழந்த ராம்குமார்- தந்தைக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

சுவாதி கொலை வழக்கில் சிறையில் உயிரிழந்த விவகாரத்தில் ராம்குமாரின் தந்தைக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும், சுதந்திரமான விசாரணை நடத்தவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்செக்ஸ் 709 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 709 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.

குஜராத் பால விபத்து-இபிஎஸ் இரங்கல்

குஜராத் தொங்கு பாலம் அறுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்-திமுக

இலங்கை அகதிகளுக்கு குடியரிமை வழங்க வேண்டும் என்று திமுக  சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. குடியரிமை திருத்தச் சட்டம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையின்போது இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

"சென்னை, வேலூர் உள்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு"

சென்னை, வேலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"சென்னை, வேலூர் உள்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு"

சென்னை, வேலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல் துறை அனுமதி

அந்தந்த மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு நிலைமைக்கு ஏற்ப ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்கள்படி இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

ஹோட்டல் அறையில் கூட தனியுரிமை இல்லை-விராட் கோலி வேதனை

எனது ஹோட்டல் அறையில் எனக்கு தனியுரிமை இல்லை என்றால் நான் வேறு எங்கு அதை பெறுவது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி வேதனை தெரிவித்தார்.

கோவை கார் வெடிப்பு வழக்கில் திறமையாக செயல்பட்ட காவலர்களுக்கு முதல்வர் வாழ்த்து

கோவை கார் வெடிப்பு வழக்கில் திறமையாகச் செயல்பட்ட காவலர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

புதிய மருத்துவமனைகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்பு-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 6 புதிய மருத்துவமனைகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்புடைய வழக்கு-டிச.6ம் தேதிக்கு ஒத்திவைப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கு விசாரணையை டிசம்பர் 6ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

ப்ளூ டிக் அக்கவுண்ட்டுக்கு இனி கட்டணம்-டுவிட்டர் முடிவு

டுவிட்டர் ப்ளூ டிக் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு மாதம்தோறும் கட்டணம் வசூலிக்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சிலிண்டர் விபத்து என தற்போதும் கூறி வருவது ஏன்?-அண்ணாமலை கேள்வி

கோவை கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "இந்த விபத்து சிலிண்டர் விபத்து என தற்போதும் கூறி வருவது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் கார்கேவுடன் சோனியா சந்திப்பு

காங்கிரஸ் தலைவர் கார்கேவை அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா சந்தித்து பேசி வருகிறார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள்-விசாரணை தொடங்கியது

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான 232 மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வலி நிறைந்த இதயத்தோடு இருக்கிறேன் : பிரதமர்

குஜராத் பால விபத்து நிகழ்வால் என் இதயம் வலியுடன் காணப்படுகிறது : பிரதமர் மோடி 

தமிழக அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள்-அமைச்சர் நேரு

வெட்கத்தை விட்டு கூறுகிறேன். தமிழக அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள் என்று நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

வலி நிறைந்த இதயத்துடன் இருக்கிறேன்-பிரதமர் மோடி

குஜராத் மாநிலத்தில் தொங்கு பால விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 130-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். வலி நிறைந்த இதயத்துடன் இருக்கிறேன் என்று பிரதமர் நேரந்திர மோடி தெரிவித்தார்.

கோவை கார் வெடிப்பு இடத்தை பார்வையிட்ட அண்ணாமலை

கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் பார்வையிட்டார்.

அதிமுகவை சேர விடாமல் பாஜக தடுக்கிறது : நேரு 

பிளவுபட்டு கிடக்கும் அதிமுகவை சேர விடாமல் தடுத்து எதிர்க்கட்சியாக வருவதற்கு பாஜக முயற்சி செய்வதாகவும் நேரு புகார் தெரிவித்துள்ளார்.

குஜராத் தொங்கு பால விபத்து-ராகுல் மவுன அஞ்சலி

குஜராத் மாநிலத்தில் தொங்கு பால விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் மவுன அஞ்சலி செலுத்தினார். அவருடன் காங்கிரஸ் தொண்டர்களும் மவுன அஞ்சலி செலுத்தினர். ராகுல் தற்போது தெலங்கானாவில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமின்றி  ரூ.63 ஆக விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.63,000ஆக விற்பனையாகிறது.

இன்றைய தங்க விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.37,720 ஆக விற்பனையாகிறது.  22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து  ரூ.4,715 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்செக்ஸ் 626 புள்ளிகள் உயர்வு 

மும்மை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 626 புள்ளிகள் உயர்ந்து 60,825 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 182 புள்ளிகள் உயர்ந்து 17,969 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம்-ராகுல் மரியாதை

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவுதினத்தையொட்டி அவரது திருஉருவ படத்திற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் மலர்த்தூவி மரியாதை செய்தார். இந்தியாவின் இரும்பு மனிதர் படேலின் பிறந்த தினத்தையொட்டி அவரது படத்திற்கும் ராகுல் மரியாதை செய்தார்.

குஜராத் பால விபத்து-பிரதமர் மோடி அஞ்சலி

குஜராத் பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

62வது மாநில கேரம் சாம்பியன்ஷிப் முடிவுகள்

62ஆவது மாநில கேரளம் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவில் பிரேம்குமார், மகளிர் பிரிவில் மித்ரா சாம்பியன் ஆனர்.

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் பரவலாக மழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியிலும் மழை பெய்து வருகிறது.

மத்திய அமைச்சர் அமித்ஷா மரியாதை

ஒற்றுமையான இந்தியா என்ற கனவை நிறைவேற்றியவர் சர்தார் வல்லபாய் படேல் என மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். 

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள்

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு ஜனாதிபதி மரியாதை செலுத்தினார். 

"குஜராத் பாலம் இடிந்து விபத்து கடவுளின் செயலா? மோசடி செயலா?"

"குஜராத் பாலம் இடிந்து விபத்து கடவுளின் செயலா? மோசடி செயலா?" என பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.  

குஜராத் தொங்கு பாலம் இடிந்து விழுந்து விபத்து - பலி எண்ணிக்கை 132 ஆக அதிகரிப்பு

குஜராத் தொங்கு பாலம் இடிந்து விழுந்து விபத்தில் பலி எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது.

Background

குஜராத் மாநிலத்தில் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது. 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராணுவம், கடற்படை, விமானப்படை, என்.டி.ஆர்.எஃப், தீயணைப்புப் படை வீரர்கள்  தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன என  குஜராத் தகவல் துறை தெரிவித்துள்ளது.


குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஞாயிற்றுக்கிழமை இரவு மாநிலத்தில் உள்ள மோர்பி நகருக்குச் சென்று, மச்சு ஆற்றின் மீது புதிதாகப் புனரமைக்கப்பட்ட பாலம் மாலையில் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் உயிரிழந்ததையடுத்து, நடந்து வரும் மீட்புப் பணியை பார்வையிட்டார். ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பழமையான பாலம், விரிவான பழுது மற்றும் புதுப்பித்தலுக்குப் பிறகு அக்டோபர் 26 அன்று மீண்டும் திறக்கப்பட்டது. 


விபத்து நடந்தது எப்படி? 
நேற்று மாலை 6.42 மணிக்கு இந்த விபத்து நடந்தது. விபத்தின் போது பாலத்தில் 500 பேர் இருந்தனர். சத் பூஜைக்காக மக்கள் கூட்டம் பாலத்தில் குவிந்திருந்தது. அப்போது எதிர்பாராமல் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இன்னும் ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தப் பாலம் கேபில்களால் ஆன பாலம்.  இது குறித்து குஜராத் தொழிலாளார் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் ப்ரிஜேஷ் மிஸ்ரா கூறுகையில், இந்தப் பாலத்தை அண்மையில் தான் சீரமைத்தோம். குஜராத் புது வருடத்தை ஒட்டி அக்டோபர் 26 ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆனால் அதற்குள் இவ்வளவு பெரிய விபத்து நடந்திருப்பது எங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்திற்கு அரசாங்கம் பொறுப்பேற்கிறது என்று கூறினார்.  


கேபிள் தொங்கு பால இடிந்து விழுந்த நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.  ராணுவம், கடற்படை, விமானப்படை, என்.டி.ஆர்.ஃபேன்ட் தீயணைப்பு படையினர் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநில முதல்வர் பூபேந்திர படேல் நிலைமையை கண்காணித்து வருகிறார், மோர்பி பாலம் இடிந்து விழுந்தது குறித்து விசாரிக்க மாநில அரசு எஸ்ஐடியையும் அமைத்துள்ளது.ஞாயிற்றுக்கிழமை மாலை கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் காயமடைந்தவர்கள் மோர்பி சிவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து விபத்துக்குப் பிறகு மோர்பி பாலத்தின் நிர்வாகக் குழுவுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி உறுதியளித்துள்ளார்.


ஞாயிற்றுக்கிழமை கேபிள் பாலம் இடிந்து இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் குஜராத்தின் மோர்பி நகரம் திங்கள்கிழமை தானாக முன்வந்து ‘பந்த்’ கடைப்பிடிக்கவுள்ளது


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.