Breaking Live: பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பிரதமர் மோடி புகழாரம்

Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 30 Oct 2022 01:31 PM

Background

Petrol, Diesel Price :  தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 162வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக்...More

Breaking Live: பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பிரதமர் மோடி புகழாரம்

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 115 வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, " பெருமதிப்பிற்குரிய  பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு உள்ளிட்டவற்றிற்கு தலைசிறந்த பங்களிப்பை அளித்துள்ளார்” என்றார்.