Breaking LIVE : வருவாய்த்துறை வசம் தேவர் தங்கக்கவசம் 

Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 26 Oct 2022 05:17 PM
நயன்தாரா குழந்தை விவகாரம் - விதிகளை மீறவில்லை 

நயன்தாரா விக்னேஷ் தம்பதியினருக்கு 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி பதிவுத் திருமணம் நடைபெற்றதாக பதிவுச் நடைபெற்றதாக பதிவுச் சான்றிதழ் சமர்பிக்கப்பட்டுள்ளது.


மருத்துவமனையில் தம்பதியினருக்கு அளித்த சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் மருத்துவமனையால் முறையாக பராமரிக்கப்படவில்லை. வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாத தனியார் மருத்துவமனையின் செயற்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் மூடக்கூடாது என நோட்டீஸ்

வருவாய்த்துறை வசம் தேவர் தங்கக்கவசம் 

தேவர் தங்கக்கவசத்தை வருவாய்த்துறை வசம் ஒப்படைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

வடக்கிழக்குப் பருவமழை 29ல் தொடங்க வாய்ப்பு 

தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை அக்.29 ஆம் தேதி தொடங்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம்

நுண்ணிய தகவல் வழங்குவோருக்கு பாதுகாப்பு 

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்து நுண்ணிய தகவல் அளிப்போருக்கு தக்க பாதுகாப்பு வழங்கவும் முதல்வர் ஆணை

தேவர் தங்க கவசம் வழக்கு 4 மணிக்கு ஒத்திவைப்பு

இன்று மூன்று மணிக்கு நடக்கவிருந்த தேவர் தங்க கவசம் வழக்கை 4 மணிக்கு மதுரைக் கிளை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது

காவல்துறையில் சிறப்பு படை அமைக்க உத்தரவு 

மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் நடைபெறாமல் தடுக்க காவல்துறையில் சிறப்பு படை உருவாக்க உத்தரவு. கோவை உள்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில், நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் 

கார் வெடிப்பு - என்ஐஏ விசாரிக்க முதல்வர் பரிந்துரை

கோவை உக்கடத்தில் கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கில் மாநிலம் தாண்டிய பரிமாணங்கள், பன்னாட்டுத் தொடர்புகள் இருக்க வாய்ப்புள்ளதால், வழக்கை என்ஐஏ விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.


 

உளவுப்பிரிவில் கூடுதல் அலுவலர்களை நியமிக்க ஆணை

மாநிலத்தின் உளவுப் பிரிவில் கூடுதல் காவல்துறை அலுவலர்களை நியமனம் செய்திடவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு 

பசும்பொன் செல்வதை தவிர்த்தார் எடப்பாடி 

தேவர் ஜெயந்தி அன்று பசும்பொன்னில் குருபூஜையில் பங்கேற்காமல் சென்னையில் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க பழனிசாமி முடிவு

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் கார்கே

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சோனியா காந்தி முன்னிலையில் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் கார்கே.


 

கார் வெடிப்பு - முதல்வர் பேசாதது ஏன் - வானதி

கோவை உக்கடத்தில் கார் வெடித்த சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்னும் பேசாதது ஏன் என வானதி சீனிவாசன் கேள்வி 


 

கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு

கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 

கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை 

காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக கோவை உக்கடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை.

திருத்தணி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம் 

திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா, விமர்சையாக தொடங்கியது. திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா 31ஆம் தேதி திருக்கல்யாணத்துடன் நிறைவு பெறுகிறது.

சென்னையின் காற்றின் தரம் உயர்வு

சென்னையில் பட்டாசு வெடிப்பால் அதிகரித்த காற்று மாசு தற்போது குறைந்து, காற்றின் தரம் உயர்வு 

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான புதிய அபராதம் இன்று முதல் வசூல்...!

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான புதிய அபராதத் தொகை இன்று முதல் வசூலிக்கப்பட உள்ளது.

Background

Petrol, Diesel Price :  தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 158வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 







சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 150 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.






கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.









இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..? 


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025 ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.