Breaking LIVE : பதவியேற்ற 45 நாட்களில் பிரிட்டன் பிரதமர் ராஜினாமா!
Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.
பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவியேற்ற 45 நாட்களுக்குள் ஆளுங்கட்சியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக ராஜினாமா செய்ததாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கும் வாரணாசிக்கும் பாரம்பரிய தொடர்பு இருக்கிறது - எல்.முருகன்
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்
தமிழகத்தில் இன்று 32 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது - காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவருடன் அமர்ந்து பயணிப்பவருக்கும் அபராதம், ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும். ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிட மறுத்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
சாலைகளில் வாகனங்களை பயன்படுத்தி பந்தயங்களில் ஈடுபட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். மாசு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கினால் ரூ,10,000 அபராதம் இன்று முதல் அமலுக்கு வந்தது.
பொது இடங்களில் வாகனங்களை ஆபத்தான முறையில் நிறுத்திவிட்டு சென்றால் முதல்முறை ரூ.500, 2-வது முறையாக ரூ.1,500 அபராதம். அதிகாரிகளிடம் தவறான தகவலை அளித்தால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதல் முறை ரூ.500, 2வது முறையாக ரூ.1500 அபராதம் விதிக்கப்படுகிறது.கார்கள், ஜீப்புகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிவேகமாக ஓட்டினால் ரூ.2,000 அபராதம்.
எனது பார்வையில் தற்போதைய காலம் பாதுகாப்புத்துறைக்கு ஒரு பொற்காலம். போர் விமானம், கப்பல், போர் டாங்கிகள் போன்றவற்றை தயாரிப்பதன் மூலம் தொழில்துறை அதிகதிறன்களை நிரூபித்துள்ளது : பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத சிங்
அனைவருக்கும் வீடு திட்டத்தில் தேசிய அளவில் தமிழகம் 3வது இடம் பிடித்ததை பாராட்டி பிரதமர் மோடி விருது வழங்கினார். குஜராத் ராஜ்கோட்டில் நடந்த விழாவில் தமிழகத்திற்கான விருதை பிரதமர் மோடியிடம் இருந்து அமைச்சர் அன்பரசன் பெற்றார்.
234 எம்.எல்.ஏக்கள் அலுவலகங்களில் இ-சேவை மையத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தெற்கு அந்தமான் பகுதியில் உருவான வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டோனியா குட்டரஸ் பங்கேற்கிறார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச் சுற்று போட்டியில் இலங்கை - நெதர்லாந்து அணிகள் இன்று காலை 9.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்த இருக்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சில பகுதிகளை பிரித்து அக்டோபர் 20, 1986 அன்று வ. உ. சிதம்பரனார் பெயரால் தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்ட தினமாக இன்று கொண்டாடப்படுகிறது.
கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட இருக்கிறது.
அந்தமான் அருகே ஏற்பட்டுள்ள காற்றழுத்ததால் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லியில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பஸ்களான முன்பதிவு மையங்கள் நாளை தொடங்கும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
Background
Petrol, Diesel Price : தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 152வது நாளாக மாற்றமின்றி இன்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 150 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.
இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 152வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (அக்டோபர்.20) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..?
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025 ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -