Breaking LIVE : ”போராட்டத்தை கைவிடுக” - புதுச்சேரி மின்துறை ஊழியர்களுக்கு அரசு எச்சரிகை
Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.
புதுச்சேரி மின் துறை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என புதுச்சேரி மின்துறையின் தலைமை பொறியாளர் எச்சரிகை விடுத்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையராக அஜய் பாது நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டிக்கு நடுவே ஏற்பட்ட மோதலின்போது 174 பேர் பலியாகினர். விளையாட்டு அரங்கில் நிகழ்ந்த மிக மோசமான கலவரமாக இது கருதப்படுகிறது.
புதுச்சேரி துணைமின் நிலையங்களில் அத்துமீறி நுழைந்து மின்சாரத்தை துண்டித்ததாக மின் ஊழியர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
தலைமறைவாக உள்ள மின் துறை ஊழியர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்தநாளில் அவர்தம் புகழை போற்றி வணங்குகிறேன். அகிம்சையின் அடையாளமாய் திகழ்ந்து அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து பெரும் சேவையாற்றிய மாசற்ற மனிதர்.
மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுகவை கண்டித்து வரும் 12 ம் தேதி டி.டி.வி. தினகரன் ஆர்பாட்டம் அறிவிப்பு
காந்தி ஜெயந்தியையொட்டி எழும்பூர் அரசு அருங்காடியகத்தில் காந்தி சிலைக்கு ஆளுநர். ஆர்.என்.ரவி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுதினார். தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள், மேயர் பிரியா உள்ளிட்டோருர் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
வடக்கிழக்குப் பருவமழை காலத்திற்கு தயாராவதற்காக சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள், தூர்வாரும் பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார்.
டெல்லி ராஜ்காட்டில் உள்ள மாகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உள்ளீட்ட தலைவர்களும் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்/
உத்தரபிரதேசத மாநிலம் கான்பூர் அருகே கடம்பூர் பகுதியில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 28 பேர் உயிரிழந்தனர்.
ஃபத்தேபூரில் உள்ள சந்திகா தேவி கோயிலில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூரில் புதிய அமைய இருக்கும் பசுமை விமான நிலையம் எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், மேள்லேறி, அங்கமாபுரம் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினந்தோறும் இரவில் 67 வது நாளாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் இரண்டாவது முறையாக பசுமை விமான நிலையம் கைவிடக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீரவரத்து குறைந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,690 கன அடியில் இருந்து 11,146 அடியாக குறைந்துள்ளது.
காந்தி ஜெயந்தியையொட்டி சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் காந்தி சிலைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று மரியாதை செலுத்த இருக்கிறார். அதேபோல், முதலமைச்சர் முக ஸ்டாலினும் தமிழக அரசு சார்பில் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்.
டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணி இடையேயான 2வது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாதியில் இன்று நடைபெறுகிறது.
மின்துறையை தனியார் மயமாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் புதுச்சேரியில் 5வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவா பகுதியில் நடந்த கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட கலவரத்தில் 127 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Background
சென்னையில் 134ஆவது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 134ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (அக்டோபர் 2) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் விலை உயர்த்தப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 12 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -