Breaking LIVE : மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி

Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.

முகேஷ் Last Updated: 01 Oct 2022 09:35 PM
மதுரை கள்ளழகர்கோவில் அறைகளில் தீவிபத்து..!

மதுரை அழகர்கோவில் பகுதியில் உள்ள கள்ளழகர்கோவில் மடப்பள்ளி அருகே உள்ள அறைகளில் தீவிபத்து - புத்தகங்கள் மற்றும் கோவிலுக்கு சொந்தமான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. தீ அணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மூத்த அரசியல்வாதியுமான நல்லகண்ணு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஆசியக் கோப்பை கிரிக்கெட் - இந்திய மகளிர் அணி வெற்றி 

ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.

திருவனந்தபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் உரை

திருவனந்தபுரத்தில் நடைபெறும்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் கூட்டாட்சி, மத்திய - மாநில உறவு என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் உரை

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வல்லவரையன் வந்தியத்தேவன் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக புகார். ராஜராஜ சோழனின் தளபதிகளில் ஒருவரான வந்தியத்தேவனை படத்தில் தவறாக சித்தரித்துள்ளதாக புகார் 

இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதி 

மேற்க வங்க ஆளுநர் இல.கணேசன் உடல்நலக்குறைவால் சென்னை அமைந்தகரை எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதி 

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூனா கார்கே - சசிதரூர் நேரடி போட்டி

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூனா கார்கே மற்றும் சசிதரூர் நேரடியாக போட்டியிடுகின்றனர். ஜார்க்கண்டைச் சேர்ந்த கே.என்.திரிபாதியின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்திற்கு ரூ 3,500 கோடி வட்டியில்லா கடனுதவி

மாநிலங்களுக்கான மத்திய அரசின் வட்டியில்லா கடனுதவி திட்டத்தில் தமிழகத்திற்கு ரூ.3500 கோடி விடுவிப்பு - பழனிவேல் தியாகராஜன்

ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து மல்லிகார்ஜூன கார்கே பதவி விலகல்

ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து மல்லிகார்ஜூன கார்கே பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 





Breaking LIVE : 2 நாட்களுக்கு கனமழை தொடரும் 

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை தொடரும்என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.


நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரிக்ஷ், தருமபுரி, திருப்பத்தூர், சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சியில் கனமழை வாய்ப்பு.

Breaking LIVE : 5ஜி சேவை தொடக்கம் : பிரதமர் உரை

இந்தியாவை அடுத்த வளர்ச்சிக்கு கொண்டு செல்ல 5ஜி சேவை வழிவகுக்கும். இது கிராம மக்கள் முதல் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் : பிரதமர் 

Breaking LIVE :  5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

புதிய தொழில்நுட்ப சகாப்தத்தை பயன்படுத்தும்வகையில் டெல்லியில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
தடையற்ற சேவை, விரைவான செயல்பாடு, அதிகரிக்கப்பட்ட அலைக்கற்றை செயல்திறனை 5ஜி தொழில்நுட்ப சேவை வழங்கும் 

மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து விசிக உள்ளிட்ட கட்சிகள் வழக்கு

அக்டோபர் 2ஆம் தேதியன்று மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து, விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளன 

அவதூறு பரப்பியதாக மூதாட்டி மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு...!

கோவை மதுக்கரை பகுதியில் பேருந்தில் இலவச பயண டிக்கெட் வாங்க மறுத்து தகராறு செய்த மூதாட்டி துளசியம்மாள் உள்ளிட்ட 4 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Breaking LIVE : இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் ஒரு கிலோ வெள்ளி ரூ.500 உயர்ந்து 62,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது 

Breaking LIVE : இன்றைய தங்க விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்து 4,690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல், ஒரு சவரனுக்கு ரூ.56 குறைந்து 37,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

அதிரடியாக குறைந்த வணிக சிலிண்டர் விலை.. மாற்றமில்லா வீட்டு சிலிண்டர் விலை..!

கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.36 குறைந்து ரூ. 2,045 லிருந்து ரூ. 2,009 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வரும் வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சமையல் சிலிண்டர் எரிவாயு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி..!

புதுச்சேரி மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை புதுச்சேரி மற்றும் காரைக்கால் என இரண்டு இடங்களில் நாளை (அக்.2) நடத்த புதுச்சேரி மாநில காவல் துறை அனுமதி அளித்துள்ளது.

அடுத்த 3 மணிநேரத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்பட 24 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

ஆசிய கோப்பை தொடர் : இந்தியா-இலங்கை மகளிர் அணிகள் இன்று மோதல்

இந்தியா-இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை போட்டி இன்று நடைபெறுகிறது.

ரஷ்யாவுடன் இணைக்கிறது இன்று உக்ரைன் பகுதிகள்..!

ரஷியா ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பகுதிகளை இன்று நடைபெற உள்ள நிகழ்ச்சியில் ரஷியா அதிகாரப்பூர்வமாக இணைக்க உள்ளது.

இன்று முதல் அறிமுகமாகும் 5ஜி..!

பிரதமர் நரேந்திர மோடி இன்று, அக்டோபர் 1ம் தேதி, புதுதில்லியில் நடைபெறும் இந்திய மொபைல் காங்கிரஸின் ஆறாவது ஆண்டுக்கான நிகழ்வில் இந்தியாவில் 5ஜியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துகிறார்.

பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் எப்போது..? அமைச்சர் பொன்முடி சொன்ன தகவல்

அக்டோபர் இறுதியில் பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தகவல்

தமிழ்நாடு, புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை மையம்

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னதுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல்

ரயில்பயணத்தின்போது அமைச்சர் மெய்யநாதனுக்கு உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


ரயிலில் சென்றபோது ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மெய்யநாதன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

Background

சென்னையில் 133ஆவது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு  நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.  இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 133ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (அக்டோபர் 1) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.









 


தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் விலை உயர்த்தப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.


பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 12 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.