Breaking LIVE : சென்னையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு

Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.

ABP NADU Last Updated: 03 Nov 2022 07:48 PM
சென்னையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பேரணியில் துப்பாக்கிச்சூடு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நடத்திய பேரணியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இச்சம்பவத்தில் இம்ரான்கான் உள்ளிட்டோர் பலர் காயம் என தகவல் வெளியாகியுள்ளது





33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி சிபிஐ மனு

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி, மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ மனுதாக்கல் செய்துள்ளது.

அமெரிக்க வட்டி விகித உயர்வு நடவடிக்கை: சரிவில் தொடங்கி சரிவில் முடிந்த இந்திய பங்குச் சந்தை

அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு நடவடிக்கையால், இந்திய பங்குச் சந்தை சரிவை கண்டுள்ளன. 


இந்நிலையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் மேலும் 69.68 புள்ளிகள் குறைந்து 60,836.41 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 30.15 புள்ளிகள் குறைந்து 18,052 புள்ளிகளாக உள்ளது.


 





உலகிலுள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனிப்பாறைகள் 2050-க்குள் உருகிவிடும்- யுனஸ்கோ

வெப்பமயமாதல் காரணமாக, உலகிலுள்ள  6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனிப்பாறைகள் 2050-க்குள் உருகிவிடும் என யுனஸ்கோ அறிக்கை வெளியிட்டுள்ளது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து  ரூ.64 ஆக விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.64,000ஆக விற்பனையாகிறது.

தீவிரவாதி முகமது ஆரிஃப்புக்கு தூக்குதண்டனை உறுதி - உச்சநீதிமன்றம்

டெல்லி செங்கோட்டையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி முகமது ஆரிஃப்புக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.

இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பங்கேற்றுள்ளார். 

இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பங்கேற்றுள்ளார். 

இல.கணேசன் இல்ல விழாவில் மேளம் வாசித்த மம்தாபானர்ஜி

இல. கணேசன் இல்ல விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மேளம் வாசித்து அசத்தினார். 

இன்றைய தங்க விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 208 குறைந்து  ரூ.37,720 ஆக விற்பனையாகிறது.  22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 26 குறைந்து ரூ.4,715 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 95 சதவீதம் மழைநீர் அகற்றம் - அமைச்சர் கே.என்.நேரு

சென்னையில் மழைநீர் அகற்றும் பணி 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தகவல் தெரிவித்துள்ளார். 

Breaking LIVE : கும்பக்கரை அருவியில் குளிக்க தடை 

தேனி பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Breaking LIVE : சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி மலையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகம் இருப்பதால் நவம்பர் 9 தேதி வரை மலையேற அனுமதியில்லை.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திடீர் பயணமாக டெல்லி செல்கிறார். 

அசோக்நகர் அரசுப்பள்ளிக்கு விடுமுறை

சென்னை, அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் இன்னும் தேங்கியே இருப்பதால் அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக ராஜா தேர்வு

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

Background

வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓரிரு தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் வரும் 6-ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று மட்டும் ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா அறிவித்துள்ளார். கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார். புதுச்சேரியிலும், காரைக்காலிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.