Breaking LIVE: 'தண்ணீர் கஷ்டம் தெரியாத அளவிற்கு மழை' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.

முகேஷ் Last Updated: 10 Nov 2022 07:00 PM
"தண்ணீர் கஷ்டம் தெரியாத அளவிற்கு மழை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

தண்ணீர் கஷ்டம் என்பது தெரியாத அளவிற்கு மழை பெய்து வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து திருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..

அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து திருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் : என்.ஐ.ஏ. அறிக்கை வெளியீடு

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 மாவட்டங்களில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக என்.ஐ.ஏ. அறிக்கை வெளியிட்டுள்ளது. 

பட்டாசு ஆலை தீ விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

மதுரை அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

Silver Rate : இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் வெள்ளி விலை கிராமிற்கு 40 காசுகள் குறைந்து  ரூ. 67.00 ஆக விற்பனையாகிறது. இதன் காரணமாக பார் வெள்ளி ஒரு கிலோ ரூ. 67,000 ஆக விற்பனையாகிறது

Gold rate : இன்றைய தங்க விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ.38,560  ஆக விற்பனையாகிறது.  22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து  ரூ.4,820 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Breaking Live: வடசென்னையில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல்மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மேலும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 1-வது நிலையின் 3-வது அலகில் நிலக்கரி துகலாக்கும் பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் மின் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.

Breaking Live: மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

சென்னை அடுத்த மாங்காடு மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். 42 வயதான லட்சுமிபதி வேலைக்காக நடந்து சென்றபோது கால் தவறி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

டி20 உலகக் கோப்பை தொடர் : அரையிறுதியில் இந்தியா- இங்கிலாந்து இன்று மோதல்

டி20 உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றனர். இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி வருகின்றன ஞாயிற்றுகிழமை பாகிஸ்தான் அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளும். 

காஷ்மீரில் பேருந்துகள் மோதலில் 3 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் சம்பா மாவட்டத்தில் இரு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 13 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில் 17 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னையில் அதிகாலை முதல் கனமழை..!

சென்னையில் சைதாப்பேட்டை, நந்தனம், ஈக்காட்டுதாங்கல், ஆயிரம் விளக்கு, ஆலந்தூர், கிண்டி, ஏர்போர்ட், பெருங்குடி, மடிப்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. 

14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - சென்னை வானிலை மையம்

தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களிலும் நாளை 30 மாவட்டங்களிலும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கோவை கார் வெடிப்பு சம்பவம்: 40க்கும் மேற்பட்ட இடங்களில் மீண்டும் களமிறங்கிய என்.ஐ.ஏ

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மீண்டும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Background

Petrol, Diesel Price :  தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 173வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 







சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 150 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.






கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.









இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..? 


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025 ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.