Breaking News Tamil LIVE : தொடங்கியது பட்டிணப் பிரவேசம் விழாவின் முக்கிய நிகழ்ச்சி

Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை விரைவுச்செய்திகளாக கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 22 May 2022 10:03 PM
பட்டிணப் பிரவேசம் விழாவின் முக்கிய நிகழ்ச்சி

மயிலாடுதுறை தருமை ஆதினத்தின் பட்டிணப் பிரவேசம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிவிகை பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.

நெல்லை கல்குவாரி விபத்து ; 6ஆவது நபர் உடல் மீட்பு

நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்த 6ஆவது நபரின் உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. கற்குவியலுக்கு கீழே லாரியில் சிக்கியிருந்த ராஜேந்திரனின் உடலை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் நன்றி

இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியதற்காக தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கே நன்றி தெரிவித்துள்ளார்.





தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடர்- இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் தமிழ்நாட்டிச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், இடம் பிடித்துள்ளார்.

தனியார் மாலில் அனுமதியின்றி மது விருந்தால் ஒருவர் உயிரிழப்பு- 3 பேர் கைது

சென்னை அண்ணாநகர் உள்ள தனியார் மாலில் அனுமதியின்றி மது விருந்து நடத்தி ஒருவர் உயிரிழந்த வழக்கில் , பார் மேலாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாலில் உள்ள பாருக்கு போலீசார் சீல்

சென்னை அண்ணாநகரில் உள்ள  வி ஆர் மாலில் உள்ள பாருக்கு போலீசார் சீல் வைத்தனர். நேற்று நடைபெற்ற மது விருந்தில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து போலீஸார் நடவடிக்கை

இன்ஜினியரிங்க் கட்டணம் உயர்கிறது..

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்துகிறது  அகில இந்திய தொழில்நுட்ப  கல்விக்குழு. 

கலைஞர் சிலையை திறந்துவைக்கிறார் வெங்கையா நாயுடு!

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் மே 28 மாலை 5.30க்கு கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்து குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு சிறப்புரையாற்றுகிறார். ஓமந்தூரார் தோட்டத்தில் ரூ.1.17கோடி செலவில் சுமார் 16 அடி உயரத்தில் கலைஞர் கருணாநிதி சிலை அமைக்கப்படுகிறது. 

இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.18,000 ஆக ஊதியம் உயர்வு : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.18,000 ஆக ஊதியம் உயர்வும், ஹெல்த் கேர் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.3 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

பெட்ரோல், டீசம் மீதான மதிப்புக் கூட்டு வரியை குறைத்து திமுக அரசு மக்கள் நலன் காக்க வேண்டும் : ஓபிஎஸ்

பெட்ரோல், டீசம் மீதான மதிப்புக் கூட்டு வரியை குறைத்து திமுக அரசு மக்கள் நலன் காக்க வேண்டும். அரசுப் போக்குவரத்து கழகங்களின் இழப்பீட்டை குறைக்கும் வகையில் வாட் வரியை குறைக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு மேலும் குறைக்க வேண்டும் : பிடிஆர்

பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு அறிவிப்பின் மூலம் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.800 கோடி இழப்பு - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

அடுத்த 5 நாட்களுக்கு மழை : சென்னை வானிலை மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு: மத்திய அரசுக்கு மட்டுமே வருவாய் இழப்பு: ப. சிதம்பரம் ட்வீட்

பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை குறைப்பது மத்திய அரசுக்கு மட்டுமே வருவாய் இழப்பு ஏற்படும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : இன்று நான்காம் ஆண்டு நினைவஞ்சலி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22, 2018 அன்று நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தூத்துக்குடி குமரெட்டியார்புரத்தில் பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். 



நிலக்கரி தட்டுப்பாடு : தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இன்று அதிகாலை முதல் 5 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தம். இதனால் 1050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு.

மாணவர்கள் மாஸ்க் அணிவதை உறுதி செய்யவேண்டும் : தொழில்நுட்ப கவுன்சில் அறிவுரை

மாணவர்கள் மாஸ்க் அணிவதை உறுதி செய்யவேண்டும் என தொழில்நுட்ப நிலையங்களுக்கு தொழில்நுட்ப கவுன்சில் அறிவுரை வழங்கியுள்ளது. 

பைக்கில் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சென்னையில் நாளை முதல் பைக்கில் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. 

பட்டினப் பிரவேசம் நிகழ்வு ஒரு ஆன்மிக விழா - தருமபுரம் ஆதீனம் பேச்சு

பட்டினப் பிரவேசம் நிகழ்வு ஒரு ஆன்மிக விழா. இதில் எந்த அரசியலும் நுழையாத அளவில் தருமபுரம் ஆதீனம் பாதையை வகுத்துள்ளது என தருமபுரம் ஆதீனம் பேசியுள்ளார். 



உலகளவில் 52.09 கோடி பேருக்கு கொரோனா

உலகளவில் இதுவரை 52.09 கோடி பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, 49.67 கோடி பேர் குணமடைந்துள்ளனர். மேலும், இந்த கொடிய தொற்றால் இதுவரை 62.99 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுதான் கூட்டாட்சியா..? நிதியமைச்சரிடம் கேள்வி எழுப்பிய பிடிஆர்.!

எந்த மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது மத்திய அரசு. மத்திய அரசு உயர்த்திய விலையை குறைக்க சொல்லி மாநிலங்களிடம் கேட்பதுதான் கூட்டாட்சியா என்று நிதியமைச்சரிடம் கேள்வி எழுப்பிய பிடிஆர் கேள்வி எழுப்பியுள்ளார். 

Background

மத்திய நிதியமைச்சர் நேற்று பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை குறைத்தார். இதன்காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.63 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ8.22 காசுகளும், டீசல் விலை ரூ6.70 காசுகளும் குறைந்துள்ளது.


முன்னதாக நேற்று இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். பெட்ரோல் விலை ரூபாய்க்கும் 8-ம், டீசல் விலை ரூபாய்க்கும் 6-ம் கலால் வரியை குறைத்துள்ளதாக அறிவித்தார். 


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலை கடுமையாக ஏறி வந்தது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அவதியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு பெட்ரோல் மீதான வரியை ரூபாய் 3 குறைத்து பெட்ரோல் விலையை ரூபாய் 100க்கு கீழ் கொண்டு வந்தது. ஆனாலும், மீண்டும் விலை ஏறியதன் விளைவாக சென்னையில் கடந்த 40 நாட்களாக பெட்ரோல் விலை ரூபாய் 110க்கு விற்பனையாகி வந்தது.


இந்த சூழலில், பெட்ரோல், டீசல் மீதான சுங்கவரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக குறைத்ததால் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர். இந்த விலை குறைப்பு மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.