Breaking News Tamil LIVE : நெல்லை கல்குவாரி விபத்து : தேடப்பட்ட உரிமையாளர் கைது..
Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை விரைவுச்செய்திகளாக கீழே காணலாம்.
நெல்லை கல்குவாரி விபத்து : தேடப்பட்ட உரிமையாளர் கைது..
சரணடைந்தார் நவ்ஜோத் சிங் சித்து.. குர்நாம் சிங் என்பவர் உயிரிழந்த வழக்கில் சித்து சரண்
ஞானவாபி வழக்கு : வாரணாசி நீதிமன்றமே விசாரிக்கும்
ஞானவாபி வழக்கு : வாரணாசி மாவட்ட நீதிமன்றமே விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது
நாட்டையே பரபரப்பாக்கிய ஹைதராபாத் என்கவுண்ட்டர் போலியானது : நீதி விசாரணை ஆணையம் அறிக்கை..
விசா முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதானால் 3 நாட்களுக்கு முன்பே தெரிவிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 112 அடியாக உயர்ந்துள்ளதால் அணை திறக்கப்பட இருக்கிறது. இதையடுத்து, கரையோரவாசிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மேலும் 20 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் மேலும் 2,259 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கபாதையில் மண் சரிந்ததில் 10 தொழிலாளர்கள் சிக்கினர். தற்போது, மண் சரிவில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க மீட்பு குழு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 உயர்ந்து ரூ. 38,288 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்திற்கு சொந்தமான 17 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர். ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் மற்றும் அவரது மகள் மீது புதிய வழக்கு பதியப்பட்டுள்ளது. ரயில்வே துறை டெண்டருக்கு 3 ஏக்கர் நிலம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தநிலையில், சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டையை அடுத்த மணமேல்குடி அருகே பொன்னகரத்தில் நாட்டுபடகில் மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் மாயம். இதையடுத்து 16 படகுகளில் 3 திசையிலும் சக மீனவர்கள் தேடி வரும் நிலையில் கடலோர பாதுகாப்பு படையினர் இன்று தேட உள்ளனர்.
அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலர்களுடன் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்.
விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிசிஐடி இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது.
உலகளவில் இதுவரை 52.55 கோடி பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில், 49.52 கோடி பேர் இதுவரை குணமடைந்தும், 62.96 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.
Background
சென்னையில் 44வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இதன்படி, இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110.85 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு மாற்றமின்றி 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர்.
பெட்ரோல், டீசல் விலையை நான்கு மாதங்களுக்கும் மேலாக சீராக வைத்திருந்து நஷ்டத்தை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருவதால், இந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தனர். 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பீப்பாய் ஒன்றுக்கு 140 டாலர் உயர்ந்துள்ளது. எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் சமன் செய்ய எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.15 உயர்த்தப்பட வேண்டும் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேற்கு டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எதிர்காலம், அமெரிக்க எண்ணெய் அளவுகோல், ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு பீப்பாய்க்கு 130.50 டாலராக ஆக உயர்ந்தது. கடந்த 2008 ஜூலைக்குப் பிறகு, இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவுகோலான பிரென்ட் கச்சா, ஒரே இரவில் ஒரு கட்டத்தில் அதிகபட்சமாக 139.13 டாலரை எட்டியது. இது கடந்ந்த 2008 ஜூலைக்குப் பிறகு இதுவும் அதிகபட்சமாக இருந்தது.
இந்தியா தனது எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதத்தை பூர்த்தி செய்ய வெளிநாட்டு கொள்முதலை நம்பியுள்ளது. இது ஆசியாவில் அதிக எண்ணெய் விலைகளால் பாதிக்கப்படக்கூடிய ஒன்றாகும்.எண்ணெய் விலைகள் ஏற்கனவே இந்த ஆண்டு 60 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. மேலும் பலவீனமான ரூபாய் மதிப்பு நாட்டின் நிதியைப் பாதிக்கலாம், புதிய பொருளாதார மீட்சியை உயர்த்தலாம் மற்றும் பணவீக்கத்தைத் தூண்டலாம்.
2017 ஆம் ஆண்டு முதல், எரிபொருள் விலைகள் சர்வதேச விலைக்கு ஏற்ப தினசரி மாற்றியமைக்கப்படும். ஆனால் 2021 நவம்பர் 4 முதல் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு செல் (PPAC) தகவல்களின்படி, மார்ச் 1ஆம் தேதி இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 111 டாலருக்கு மேல் உயர்ந்தது. நான்கு மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரிக்காத நேரத்தில் இந்திய கச்சா எண்ணெயின் பீப்பாய் விலை சராசரியாக 81.5 டாலராக ஆக இருந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -