Breaking News Tamil LIVE: மேகதாது விவகாரம் - தமிழகத்திற்கு எதிராக கர்நாடகாவில் தீர்மானம் நிறைவேற்றம்
Breaking News Tamil LIVE Updates: இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
மேகதாது விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவை தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். லக்னோவில் நடந்த எம்எல்ஏக்களின் கூட்டத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவராக ஆதித்யநாத் தேர்வானார். நாளை மாலை நடைபெறும் விழாவில் அம்மாநில முதலமைச்சராக அவர் பதவியேற்கிறார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று முதல் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பித்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிகோரி போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று முதல் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பித்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிகோரி போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை துபாய்க்கு பயணம் மேற்கொள்கிறார். அதற்காக தனது வீட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார். முதலமைச்சரை அனுப்பி வைக்க விமான நிலையத்தில் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
வேலூரில் ஆட்டோவில் பயணித்த பெண் மருத்துவர் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை அடுத்து காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு ஆட்டோ ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது
இலங்கை கடற்படையால் பிடித்துச்செல்லப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரம்பற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு ஒத்துழைக்காவிட்டால் தமிழகம் நீதிமன்றத்தை நாடலாம் - உச்சநீதிமன்றம்
பூமிமீது ஏற்படுத்தும் எந்தவொரு பாதிப்பையும் கண் மூடி வேடிக்கை பார்க்க கூடாது. சுத்தமாக ஓடிய ஆறுகள் தற்போது கழிவுநீர் கால்வாய்களாக மாறியுள்ளன என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தெரிவித்துள்ளார்
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா எண்ணிக்கை 1,938 ஆக உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு 37 ரூபாய் உயர்ந்து 4,832 ரூபாய்க்கும், சவரனுக்கு 296 ரூபாய் உயர்ந்து 38,648 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடந்த ஆண்டு மழைநீர் தேங்கிய இடங்களில் மீண்டும் நீர் தேங்காதவாறு இருக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு முதலமைச்சர் வலியுறுத்தி இருக்கிறார். உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்
10 நிமிடத்தில் உணவு டெலிவரி என்ற அறிவிப்பு குறித்து சொமேட்டோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்க, சென்னை போக்குவரத்து காவல் துறை முடிவு செய்துள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் அட்டாக்ஸியா என்ற தசைப்பிடிப்பு நோயால் இரண்டு வாரமாக பெண் வெள்ளை புலி அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று உயிரிழப்பு
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் 2 படகுகளுடன் கைது
மும்பையில் விளையாடுவது எங்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்காது - ரோகித் சர்மா பேட்டி
28வது நாளாக தொடரும் ரஷ்யா உக்ரைன் போர் - வெடிகுண்டு தாக்குதலுக்கு ரஷிய பத்திரிக்கையாளர் உயிரிழப்பு.
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த வழக்கு: நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட்
பல்கலைக்கழக நுழைவுத்தேர்விற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எதிர்ப்பு. அறிவிப்பை திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தல்
சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 137 நாட்களுக்கு பிறகு கடந்த மார்ச் 23-ம் தேதி உயர்ந்தது. அதனை அடுத்து, நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து ரூபாய் 102.91க்கு விற்பனையானது. டீசல் ஒரு லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து, 92.95 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் பெட்ரோல், டீசல் விற்பனையாகிறது.
Background
சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 137 நாட்களுக்கு பிறகு கடந்த மார்ச் 23-ம் தேதி உயர்ந்தது. அதனை அடுத்து, நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து ரூபாய் 102.91க்கு விற்பனையானது. டீசல் ஒரு லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து, 92.95 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் பெட்ரோல், டீசல் விற்பனையாகிறது.
முன்னதாக, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். பெட்ரோல், டீசல் விலையை நான்கு மாதங்களுக்கும் மேலாக சீராக வைத்திருந்து நஷ்டத்தை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருவதால், இந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -