Breaking News Tamil LIVE: ‘கட்சி கூட்டத்தைப்போல் பேசினார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்’ - அண்ணாமலை
Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
மக்களின் காவலர்களாக செயல்படவேண்டும், காவல்துறையினர் நம் நண்பர்கள் என மக்கள் கொண்டாடவேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்
உதயநிதிபோல் நடிக்க தெரியாது - அண்ணாமலை
படத்தில் நடித்தது குறித்து கேட்டதற்கு, உதயநிதிபோல் நடிக்கத் தெரியாது என பதில் கொடுத்த அண்ணாமலை
‘கட்சி கூட்டத்தைப்போல் பேசினார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்’ - அண்ணாமலை
தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், தேனி, கடலூர், சேலம்,உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.வைச் சேர்ந்த மூன்று வேட்பாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். திமுக சார்பில் என்.கல்யாண சுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் விருப்ப மனு தாக்குதல் செய்தனர்.
சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை,அண்ணா நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொரோனா தொற்று எண்ணிகை அதிகமாக பதிவாகியுள்ளதாக மருத்துவத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா நோய்தொற்று பரவல் அதிகரித்து வருவதால், அதைக் கட்டுபடுத்த மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டின் மிகப் பெரும் ட்ரோன் திருவிழாவை டெல்லியில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, மத்திய அரசின் சிறந்த கொள்கைகளால் ட்ரோன் பயன்பாடு நாட்டில் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். மேலும், விவசாயம் மீன்பிடித் தொழில்களில் ட்ரோன் பயன்பாடு சிறந்த பலனைத் தரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை, பள்ளிக்கரணையில் டிஏவி குழுமத்தின் புதிய பள்ளியைத் திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள் என்றும், தாய்மொழிக் கல்விக்கு ஊக்கம் தாருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. விசா முறைகேடு தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகியுள்ளார்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவப்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
Background
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, கட்டமைப்பு பணிகளுக்கான திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டினார். அதன்பின்னர் அவர் உரையாற்றினார்.
விழாவில் பேசிய முதலமைச்சர், “இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டி மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சி பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல, சமூகநீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கியது தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி. தமிழ்நாடு போன்ற வளர்ச்சி மாநிலங்கள் அளிக்கும் பங்கிற்கு ஏற்ப மத்திய அரசு நிதியுதவி மற்றும் திட்டங்களை அளிக்க வேண்டும். தமிழ்நாட்டின் முக்கியமான கோரிக்கைகள் முன்வைக்கிறேன்.
முதலில் மீனவர்களின் நலனுக்காக கச்சதீவை மீட்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை விரைந்து வழங்க வேண்டும். பழமைக்கும் பழைமையாக உள்ள உலக செம்மொழியான தமிழை இந்திக்கு இணையான அலுவல் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாகவும் அறிவிக்க வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதலை மத்திய அரசு அளிக்க வேண்டும் ” எனத் தெரிவித்தார்.
அதனை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “முதலமைச்சர் பேசிய அத்தனைக்கும் நாளை பதிலடி அறிக்கை வரும். ஜி.எஸ்.டி கவுன்சில் பற்றிய புரிதலே இல்லாமல், எழுதி கொடுத்ததை வாசித்திருக்கிறார் முதல்வர்” என தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், “விழாவில் முதலமைச்சர் நடந்து கொண்ட விதம் தமிழக சரித்திரத்திலேயே கரும்புள்ளியாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. முதலமைச்சர் செய்திருப்பது சரித்திர தவறு” என தெரிவித்திருக்கிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -