Breaking News Tamil LIVE: ரஜினிகாந்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி
Breaking News Tamil LIVE Updates: இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
ABP NADU Last Updated: 23 Mar 2022 06:09 PM
Background
சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 137 நாட்களுக்கு பிறகு நேற்று உயர்ந்தது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து ரூபாய் 102.91க்கு விற்பனையாகிறது. டீசல் ஒரு லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து, 92.95 ரூபாய்க்கு விற்பனையாகிறது.முன்னதாக, பெட்ரோல், டீசல்...More
சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 137 நாட்களுக்கு பிறகு நேற்று உயர்ந்தது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து ரூபாய் 102.91க்கு விற்பனையாகிறது. டீசல் ஒரு லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து, 92.95 ரூபாய்க்கு விற்பனையாகிறது.முன்னதாக, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். பெட்ரோல், டீசல் விலையை நான்கு மாதங்களுக்கும் மேலாக சீராக வைத்திருந்து நஷ்டத்தை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருவதால், இந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ரஜினிகாந்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி
முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் புத்தகத்தை படித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அவரது வாழ்த்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். நண்பர் ரஜினிகாந்த் பாராட்டு மகிழ்ச்சியை மட்டுமல்ல, மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தையும் அளிக்கிறது.