Breaking News Tamil LIVE: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது- செயலாளர் ராதாகிருஷ்ணன்
Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு, இந்தியா,உலகம்,விளையாட்டு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் உடனுக்குடன் தகவல்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
கோவை காவல் ஆணையராக பாலகிருஷ்ணன், நெல்லை காவல் ஆணையராக அவினாஷ் குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை காவல் ஆணையராக பாலகிருஷ்ணன், நெல்லை காவல் ஆணையராக அவினாஷ் குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 12 பேருக்கு உருமாறிய ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தாய்மார்களுக்கான நியூட்ரிஷியன் கிட் குளறுபடி.. அனிதா டெக்ஸ்காட்டுக்கு டெண்டர் ரத்துசெய்யவேண்டும் - அண்ணாமலை
தாய்மார்களுக்கான நியூட்ஷியன் கிட் : Pro Pl ரத்துசெய்துவிட்டு ஆவினுக்கு வழங்கவேண்டும் - அண்ணாமலை
சென்னையில் நடைபெற்று வரும் மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இந்தியாவில் 4270 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள 60 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்தவித மாற்றமும் இல்லை.
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் முதல் முறையாக சொகுசு கப்பல் பயணத்தை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
Background
தமிழ்நாட்டில் முதல் முறையாக சொகுசு கப்பல் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து சொகுசு கப்பல் பயண திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். கார்டேலியா(Cordelia) என்ற தனியார் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த நிறுவனம் மூலம் தமிழ்நாட்டில் ஆழ்கடல் பகுதிக்கு மக்கள் சுற்றுலா சென்று பார்க்கும் வசதியை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்து வைக்க திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று அத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அந்த சொகுசு கப்பல் வசதிகள் என்னென்ன? அதில் பயணம் செய்வது எப்படி?
சொகுசு கப்பல் திட்டம்:
இந்த சொகுசு கப்பல் பயணத்திற்கு 2 நாள், 3 நாள் மற்றும் 5 நாள் திட்டங்கள் உள்ளன. அதாவது சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரும் வகையில் இரண்டு நாள் சுற்றுலா திட்டம் உள்ளது. அதேபோல் சென்னை துறைமுகத்தில் இருந்து விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து புதுச்சேரி சென்று அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்பும் வகையில் 5 நாள் சுற்றுலா திட்டம் உள்ளது.
கார்டிலாவின் இந்த சொகுசு கப்பல் சுமார் 700 அடி நீளம் கொண்டள்ளது. அத்துடன் இந்த கப்பல் 10 தளங்கள் கொண்டது. மொத்தம் 796 அறைகள் உள்ளன. இவை தவிர ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசிக்கும் வகையில் கலையரங்கம், 4 பெரிய ரெஸ்டாரண்டுகள், மதுகூடம், உடற்பயிற்சி கூடம், ஸ்பா, மசாஜ் செண்டர், யோகாசனம் செய்யும் இடம், நீச்சல் குளம், கேசினோ, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளது.
சொகுசு கப்பல் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
இந்த சொகுசு கப்பல் திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும். இதற்கான விலை தனியார் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. சுமார் 22 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை இந்த சொகுசு கப்பலில் பயண திட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பெருமளவில் எதிர்பார்ப்பு இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும் இலங்கையில் தற்போது இருக்கும் பொருளாதார சூழல் சரியான பின்பு சென்னையிலிருந்து இலங்கைக்கும் சொகுசு கப்பல் பயணம் தொடரும் என்று கருதப்படுகிறது.
மேலும் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 13 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -