Breaking LIVE: பெரியார் பல்கலை.பாலியல் வழக்கில் சிக்கிய பொறுப்பு பதிவாளர் சஸ்பெண்ட்..!

Breaking Live : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் அடுத்த 24 மணிநேரத்தில் நடைபெற இருக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 26 Jul 2022 07:42 PM
பெரியார் பல்கலை.பாலியல் வழக்கில் சிக்கிய பொறுப்பு பதிவாளர் சஸ்பெண்ட்..!

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கோபி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

தற்கொலை செய்துகொண்ட கீழச்சேரி மாணவியின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது!

திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் உடல் உடற்கூராய்வு முடிந்து சொந்த ஊரான தெக்களூரை கொண்டு செல்லப்பட்டது.


 


 

 சோனியா காந்தியிடம் விசாரணை நடத்துவதை எதிர்த்து பேரணி- ராகுல் காந்தி கைது

 சோனியா காந்தியிடம் விசாரணை நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி மேற்கொண்ட ராகுல் காந்தியை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம்- பள்ளி நிர்வாகிகள்,ஆசிரியர்களை விசாரிக்க சிபிசிஐடி மனு!

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களை காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி மனு அளித்துள்ளது.  இதற்கு அனுமதி வழங்க கோரி விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நிதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. மனு அளித்துள்ளது.  இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது. சம்பந்தப்பட்டோர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியுள்ளது.

காங்கிரஸ் கட்சியினர் பேரணி- போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி கைது செய்த போலீசார்!

 சோனியா காந்தியிடம் விசாரணை நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி மேற்கொண்ட ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சிட்யைச் சேர்ந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ரஞ்சித் ராஜன், (Ranjeet Ranjan)  கே.சி. வேணுகோபல் (KC Venugopal,) மாணிக்கம் தாகூர் (Manickam Tagore) இன்ரான் பிரதாப்கிரி (Imran Pratapgarhi), கே. சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு- நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.

நேசனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பாக சோனியா காந்தியிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்று வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர், நாடாளுமன்றத்தில் காந்தி சிலையில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி  பேரணியில் ஈடுபட்டனர்.விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ராகுல்காந்தி தலைமையில்  ப.சிதம்பரம்  உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் இதில் கலந்துகொண்டனர்.

இந்திய கொரோனா நிலவரம்- ஒரே நாளில் தொற்று பாதித்தவரின் எண்ணிக்கை 14,830 ஆக பதிவு!

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்று பாதித்தவரின் எண்ணிக்கை 14,830 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருவோர் 1,47,512 ஆக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தொற்றிற்கு குணமடைந்தோர் எண்ணிக்கை : 4,32,46,829 


இதுவரை தொற்றிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை - 4,39,20,451


தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை -  5,26,110


 

Breaking LIVE: திருவள்ளூர் மாணவியின் உடற்கூராய்வு தொடக்கம்...3 குழுக்களாக பிரிந்து விசாரிக்க முடிவு

திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் உடல் உடற்கூராய்வு செய்யும் பணி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தொடங்கியது. இந்த வழக்கில் சிபிசிஐடி அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்த முடிவு 

Breaking LIVE: தமிழகத்தில் பரவலாக மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் அரியலூர், திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Breaking LIVE: சென்னைக்கு அருகே புதிய விமான நிலையம் - இன்று முடிவு

சென்னைக்கு அருகே எந்த ஊரில் புதிய விமான நிலையம் அமைப்பது பற்றி இன்று முடிவு செய்யப்படுகிறது - திருவள்ளூர் பன்னூர் அல்லது காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய விமானம் நிலையம் அமைக்கலாமா என டெல்லியில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. 

Breaking LIVE: கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக மேலும் ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கலவரத்தில் ஈடுபட்ட வழக்கில் 307வது நபர் கைது - பூசப்பாடியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீசார்  கைது செய்தனர். 

Background

முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. 


கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்ள நடைபெற்ற டெண்டர் ஒதுக்கீட்டில் சுமார் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது  வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


அதில் ஒட்டன்சத்திரம் – தாராபுரம் - அவினாசிபாளையம் நான்கு வழிச் சாலைக்கான திட்ட மதிப்பீடு ரூ.713.34 கோடியாக இருந்தது. ஆனால்அந்த திட்டத்துக்கான நிதி ரூ.1,515 கோடியாக உயர்த்தப்பட்டதோடு மட்டுமல்லாமல் அதற்கான ஒப்பந்தம் எடப்பாடி பழனிசாமியின் உறவினரான ராமலிங்கம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டது. இதேபோல் திருநெல்வேலி – செங்கோட்டை - கொல்லம் நான்கு வழிச் சாலையை விரிவுபடுத்தி பலப்படுத்துவதற்கான ரூ.720 கோடிக்கான ஒப்பந்தம் வெங்கடாஜலபதி அன்ட் கோ என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. மேலும் இதே நிறுவனத்துக்கு ரூ.200 கோடி மதிப்புள்ள மதுரை ரிங் ரோடு ஒப்பந்தமும் வழங்கப்பட்டிருந்தது. 


கடந்த 2018 ஆம் ஆண்டு  இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா சிபிஐ விசாரணைக்கு வழக்கை  மாற்றி உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் விசாரித்து சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் நீண்ட கால  நிலுவையில் உள்ள இந்த வழக்கை விரைந்து விசாரணை நடத்தும் பட்டியலில் சேர்க்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று முறையீடு செய்யப்பட்டது.


இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருவதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.