Breaking LIVE: 68 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு
Breaking Live :தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
5 பிரிவுகளின் கீழ் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படவுள்ளன.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாயமானது குறித்து 4 மாதங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 37,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களை கைது செய்யக்கூடாது - நீதிமன்றம்
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் விருதுநகரில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
நாளை காலை 6 மணி அல்லது 7 மணிக்கு மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும். நாளை காலை 11 மணிக்குள் இறுதிசடங்கை நடத்த நீதிபதி சதீஷ் குமார் உத்தரவு.
கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை நாளை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது. வதந்திகள், போலியான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டுள்ளது விசாரனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது - பகலவன், எஸ்.பி
அதிமுக பொதுக்குழு தொடர்பாக பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரனை.
மாணவியின் மரணத்தில் வேறு சிலர் ஆதாயம் தேடுகின்றனர், அது பெற்றோருக்கு தெரியாமல் நடந்துள்ளது. மகளின் உடலை நாளைக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்- நீதிபதி
உடற்கூராய்வு அறிக்கையை குறித்து பெற்றோர்கள் அதிருப்தி அடைந்த நிலையில், கண்ணியமான முறையில் இறுதி சடங்கு நடத்துங்கள் என நீதிமன்றம் உத்தரவு.
கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் கூராய்வு அறிக்கையை ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்ய உத்தரவு
நீதிமன்றம் உத்தரவிட்டும் மாணவியின் உடலை பெற்றுக்கொள்வதில் ஏன் தாமதம் ? ஒவ்வொரு முறையும் ஏன் பிரச்சனை ஏற்படுத்துகிறீர்கள் என பெற்றோரிடம் நீதிபதி கேள்வி.
இரண்டாவது உடல் கூராய்வில் புதிதாக எதுவும் தெரியவில்லை என நீதிமன்றத்தில் தகவல்.
கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொள்ளவில்லை என தொடரப்பட்ட வழக்கில் விசாரணை. உச்சநீதிமன்ற உத்தரவு நகலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதிஷ்குமார் முன்பு அரசு தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
புதுச்சேரி கோரிமேடு வெள்ளவாரி ஓடை அருகே பன்னீர்செல்வம் என்பவரை மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 21,085 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறையை டிஜிட்டல் சேவைகள் துறை என பெயர் மாற்றம் செய்ததற்க்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
10 ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா சார்பில் பெண்கள் பங்கேற்கும் 3 வது அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
68 வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுகிறது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இன்று முதல் ஒருநாள் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இன்று நடைபெறுகிறது.
உலகளவில் இதுவரை 57.23 கோடி பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, 54. 24 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இந்த கொடிய கொரோனா தொற்றால் இதுவரை 63.97 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.
Background
சென்னையில் 62வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43 க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் இதன் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் போர் உள்ளிட்ட பல காரணங்களால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் 137 நாட்களுக்குப் பின் மார்ச் 22 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உயர்ந்து ரூ.110ஐ எட்டியது.
இதனால் அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன் விலையை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைத்தார். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -