Breaking LIVE: ’அரசு அலுவலகங்கக் கட்டடங்களை பொது மக்கள் எளிதில் வந்து செல்லும்படி கட்டுங்கள்’ - உயர் நீதிமன்றம்

Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 07 Dec 2022 04:23 PM
நெருங்கிய புயல்.. அடுத்த 3 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை..?

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுரை, நாகப்பட்டினம், தஞ்சாவூர்,திருவாரூர், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிமை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

கோவை கார் வெடிப்பு வழக்கு - மேலும் மூன்று பேர் கைது

உமர்பாரூக், தவுபிக், பெரோஸ் கான் ஆகிய மூன்று பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். இவ்வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் மூவர் கைது செய்துள்ளனர். 

Breaking LIVE: ’அரசு அலுவலகங்கக் கட்டடங்களை பொது மக்கள் எளிதில் வந்து செல்லும்படி கட்டுங்கள்’ - உயர் நீதிமன்றம்

அரசு அலுவலகங்கள் கட்டப்படும்போது பொது மக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் கட்டப்பட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.


காட்டுப்பகுதிக்குள் கட்டப்பட்ட கட்டடத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்தை அமைக்க தடை விதிக்கக்கோரிய வழக்கில் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Breaking LIVE: சென்னைக்கு 770 கி.மீ தொலைவில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

”சென்னைக்கு 770 கி.மீ தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. சென்னையை நெருங்கி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாறும். மணிக்கு 15 கி.மீ வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் டிசம்பர் 9ஆம் தேதி மிக மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Breaking LIVE: கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழ்நாடு வந்தடைந்த தேசியப் பேரிடர் மீட்புப் படை

கனமழை எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள திருவாரூர், தஞ்சாவூருக்கு மீட்புப் படையினர் வந்தடைந்தனர்.


அரக்கோணத்தில் இருந்து 25 பேர் கொண்ட தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களுக்கு வந்தடைந்தனர்.

Breaking LIVE: தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழை தொடங்கும்!

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெற்ற நிலையில், தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையத்தில் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

விலை உயர்ந்த தங்கம், வெள்ளி..!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து  ரூ. 40,128 ஆக விற்பனையாகிறது.  22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.6 உயர்ந்து  ரூ.5,016 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 43,344 ரூபாயாகவும், ஒரு கிராம் ரூ.5,416 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


வெள்ளி விலை நிலவரம்:


சென்னையில் வெள்ளி விலை ஒரு ரூபாய் 80 காசுகள் உயர்ந்து ரூ.71 ஆக விற்பனையாகிறது.  பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.71,000ஆக விற்பனையாகிறது.

டெல்லி மாநகராட்சி தேர்தல்... ஆம் ஆத்மி 77, பாஜக 55, காங்கிரஸ் 04

டெல்லி மாநகராட்சி தேர்தலில் இதுவரை ஆம் ஆத்மி கட்சி 77 வார்டுகளிலும், பாஜக 55 இடங்களிலும், காங்கிரஸ் 04 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 

12 மணிக்கு மக்களவை ஒத்திவைப்பு..!

மறைந்த முன்னாள் மற்றும் இன்னாள் மக்களவை உறுப்பினர்களுக்கு மக்களவையில் தற்போது இரங்கல் தெரிவிக்கப்பட்டு,  அவை 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

எதிர் கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - மோடி

நாடாளுமன்ற கூட்டத்தொடர் சிறப்பாக நடைபெற எதிர் கட்சிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். 

அதிமுகவின் ஓபிஎஸ் அணியில் இருந்த செல்வராஜ் திமுகவில் இணைந்தார்..!

அதிமுகவின் ஓபிஎஸ் அணியில் இருந்த கோவையைச் சேர்ந்த செல்வராஜ், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். 

நாகை சென்றது தேசிய பேரிடர் மீட்புப் படை..!

புயல் கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ள 25 வீரர்களைக்  கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படை நாகப்பட்டினம் சென்றுள்ளது. 

Breaking Live : சென்னை தனியார் மருத்துவமனையில் தீ விபத்து

சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் 2ஆவது தளத்தல் தீ விபத்து ஏற்பட்டது. உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Breaking Live : சென்னை தனியார் மருத்துவமனையில் தீ விபத்து

சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் 2ஆவது தளத்தல் தீ விபத்து ஏற்பட்டது. உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு..!

பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசுப்படும் என்ற சமூகவலைதளப் பதிவின் எதிரொலியாக சென்னையில் உள்ள 106 பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

டெல்லி மாநகராட்சித் தேர்தல்; ஆம் ஆத்மி முன்னிலை..!

டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆம் ஆத்மி 101 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

9125 கார்களை திரும்பப் பெறுகிறது மாருது சுசுகி..

காரில் உள்ள தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப் பட்டுள்ளதால் 9,125 கார்களை திரும்பப் பெறுவதாக மாருது சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Background

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 200வது நாளாக மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம்   மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்ட மன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 


இதன்பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 200வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (டிசம்பர் 7 ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. தற்போது கிட்டதட்ட விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை 200வது நாளை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.  


இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..? 


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


2025 இலக்கு:


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.