Breaking LIVE : இலங்கை அருகே வங்க கடலில் நிலநடுக்கம்
Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
இலங்கை அருகே வங்காள விரிகுடா கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளது
தமிழ்நாட்டில் அடுத்த 3 மண நேரத்திற்கு 16 மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேப்பூர் அடுத்த பூனாம்பாடி கிராமத்தில் மின்சாரம் தாக்கியதில் 4 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தது.
ஜி20 மாநாடு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு. 2023ஆம் ஆண்டு இறுதியில் நடைபெறும் ஜி20 மாநாட்டின் முன்னேற்பாடு பணிகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை தீபத் திருவிழா ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் இணையத்தில் வெளியிடப்பட்டன. https://annamalaiyar.hrce.tn.gov.in/ என்ற இணையத்தில் அதிகாரப்பூர்வ தரிசன டிக்கெட் வெளியீடு.
திருவண்ணாமலை தீபத் திருவிழா ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் இணையத்தில் வெளியிடப்பட்டன. https://annamalaiyar.hrce.tn.gov.in/ என்ற இணையத்தில் அதிகாரப்பூர்வ தரிசன டிக்கெட் வெளியீடு.
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் காலை 12.30 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. அதேபோல், டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என அறிவித்துள்ளது.
தென்காசி: நீர்வரத்து சீரானதால் பிரதான அருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை தொடரில் முன்னாள் கால்பந்து வீரர் மரடோனா அடித்த 8 கோல்களின் சாதனையை மெஸ்ஸி முறியடித்தார்.
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதிக்கு அர்ஜெண்டினா முன்னேறியது. அதேபோல், நெதர்லாந்து 3-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முதல் அணியாக முன்னேறியது.
சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் பயணியிடமிருந்து ரூ.49.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கார்த்திகை தீப திருவிழா, முகூர்த்த நாள் என்பதால் கோயம்பேட்டில் பூக்களின் விலை ஒரே நாளில் 3 மடங்கு உயர்ந்துள்ளது.
madden Julian oscilation காரணமாக தமிழகத்தில் வரும் நாட்களில் கன மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Background
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 190 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை:
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 197வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (டிசம்பர்.4) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..?
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
2025 இலக்கு:
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -